2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு (2001, Nepal census) என்பது, நேபாள மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். [1] 2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறையால், மாவட்ட நிர்வாகங்கள், நகர நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளுடன் இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. [2] நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia