2006 உலகக்கோப்பை காற்பந்து
2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது. ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன. ஆடு களங்கள்மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன. அணிகள்![]() குழுக்கள்இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]
நேரடி ஒளிபரப்புஉலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள்ஆங்கிலம்
தமிழ்
|
Portal di Ensiklopedia Dunia