2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியல், இப்போட்டியில் பங்குபற்றிய தேசிய இணை ஒலிம்பிக் குழுக்களை அவை பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப் படுத்துகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, உடல் வலுக் குறைந்தோருக்காக நடாத்தப்படும் பராலிம்பிக் போட்டியின் பதினான்காவது போட்டி இதுவாகும். இப்போட்டிகள் ஆகத்து 29, 2012இலிருந்து செப்டெம்பர் 9, 2012 வரை லண்டன் நகரில் நடைபெற்றது.[1]
164 நாடுகளைச் சேர்ந்த 4280 போட்டியாளர்கள், 20 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற 503 போட்டிகளில் பங்கு பற்றின. பராலிம்பிக் போட்டியொன்றில் அதிக நாடுகள் மற்றும் அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டி இதுவேயாகும்.[2] இப்போட்டிக்கான பதக்கங்கள் லின் செங் என்பவரால் வடிவமைக்கப் பட்டது. இப் பதக்கங்களில், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேக்கப் பெண் கடவுளான நைக்கின் சிறகுகள் இவற்றில் காட்டப்பட்டுள்ளன. பதக்கங்கள் ரோயல் மின்ட் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டன.[3]
57 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது பெற்றுள்ளன. மேலும் 75 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது பெற்றுள்ளன.[4]சிலி,[5]எதியோப்பியா[6]பிஜி,[7]இலங்கை,[8] மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியன தமது முதல் பராலிம்பிக் பதக்கங்களை வென்றன.[9][10] மேலும் பிஜி ஒலிம்பிக் போட்டிகளிலேயே தமது முதல் பதக்கத்தைப் பெற்றது.[11] சீனா 95 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 231 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. போட்டி நடத்தும் நாடான பிரித்தானியா 34 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 120 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[4] மிகவும் வெற்றிகரமான வீரராக ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜக்குலின் பிரனீ காணப்படுகிறார். இவர் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். நீச்சல் தவிர்ந்த ஏனைய போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான வீரர்களாக ரேமண்ட் மார்ட்டின் (ஐக்கிய அமெரிக்கா), சாரா ஸ்டோரி (பிரித்தானியா) மற்றும் டேவிட் வய்ர் (பிரித்தானியா) ஆகியோர் உள்ளனர். இவர்கள் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.[12]
பதக்கப் பட்டியல்
* போட்டி நடத்தும் நாடு (பிரித்தானியா)
பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியல், வென்ற தங்க வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது