2013 இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்2013 இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எனப்படுபவை இலங்கை முசுலீம்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதிகளும் பேரினவாத பிக்குமார்களும் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் ஆகும். 2013 இல் முசுலீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமாகி வருகின்றன.[1] பல்வேறு பள்ளிவாசல்களும், முசுலீம்களின் வணிக நிறுவனங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் முசுலீம்களின் அலால் உணவு முறையை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தனிநபர் தாக்குதல்களும், பல்வேறு துன்புறுத்தல் நிகழ்வுகளும் இடம்பெறுள்ளன. முசுலீம்கள் தொடர்பான அவதூறுகள் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. பொறுப்பானவர்கள்பௌத்த சக்திப் படை அல்லது பெளத்த சேன என அறியப்படும் சிங்கள பெளத்த பேரினவாத அமைப்பும் ஜாதிக எல உறுமய (தேசிய மரபுக் கட்சி) என்ற அரசுடன் இணந்த பிக்குமார்கள் கட்சியும் இத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.[2] பல்வேறு தாக்குதல்கள் பெளத்த பிக்குமார் தலைமையில் அல்லது பங்களுடன் நடந்துள்ளன. இத் தாக்குதல்களுக்கு இலங்கையில் ராசபக்ச அரச ஆதரவு உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.[1] நிகழ்வுகள் காலக்கோடு
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia