2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் (2014 ConIFA World Football Cup) என்பது கொனிஃபா என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது ஆட்டத் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் ஃபீஃபா கூட்டமைப்பில் அங்கம் பெறாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றவர்கள் ஆகியோரின் கால்பந்து அணிகளுக்கு இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டின் ஆட்டங்கள் அனைத்தும் சுவீடன் நாட்டின் ஓஸ்டர்சுன்ட் நகரில் சாப்மி பிராந்திய கால்பந்து அணி இப்போட்டிகளை நடத்தியது.[1][2].
போட்டித் தொடர்
2013 மே மாதத்தில் 2014 போட்டித்தொடரை நடத்துவதற்கு சாப்மி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கொனிஃபா ஆறிவித்தது. அழைக்கப்பட்ட அணிகளே பங்குபற்றின.[3] 2014 சூன் 1 முதல் சூன் 8 வரை ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] அனைத்துப் போட்டிகளும் 6000-இடவசதியுள்ள சாம்கிராஃப்ட் அரங்கில் இடம்பெற்றன.[5]
இத்தொடரில் 12 அணிகள் பங்குபற்றின.[6][7][8][9][10][11]காத்தலோனியா[12]ராப்பா நூயி[13] ஆகிய அணிகளும் இப்போட்டியில் பங்குபற்றுவதாக அறிவித்திருந்தன. ஆனாலும் பின்னர் அவர்கள் பங்குபற்ற மறுப்புத் தெரிவித்தன. சான்சிபார், கியூபெக் அணிகளும் கடைசி நேரத்தில் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை.
போட்டித் தொடரின் போது, பங்குபற்றும் அணிகளின் கலாசாரத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.[14]
பங்கு பற்றிய அணிகள்
இப்போட்டித் தொடரில் பங்குபற்றிய 12 அணிகளும் பின்வருமாறு:[15]