2021 சித்தி நகரப் பேருந்து விபத்து2021 சித்தி நகரப் பேருந்து விபத்து (2021 Sidhi bus accident) இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் நிகழ்ந்தது. சித்தி நகரத்திலிருந்து சத்னா நகருக்கு 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானது. பேருந்து ஓட்டுநர் தன் கட்டுபாட்டை இழந்த காரணத்தால் பேருந்து சத்னா நகருக்கு அருகில் இருந்த பாலத்தின் மீது மோதி சிற்றாற்றில் விழுந்து நொறுங்கியது. [1] பேருந்து முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி சிறிது தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டது. பங்கங்கா திட்டத்தில் இருந்து கால்வாய்க்கு வரும் நீரை மாவட்ட நிர்வாகம் நிறுத்திய பின்னரே பேருந்தை காண முடிந்த்து. இந்த விபத்தில் குறைந்தது 51 பயணிகள் இறந்தனர். [2] விபத்தினால் அல்லது நீரில் மூழ்கியதால் இந்த இறப்புகள் நிகழ்ந்தன. [3] ஓட்டுநர் உள்ளிட்ட ஏழுபேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia