2022 தில்லி மாநகராட்சி தேர்தல்
பின்னணிதெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் 18 மே 2022 அன்றுடன் நிறைவுற்றது. [1] . மீண்டும் தில்லி மாநகராட்சிகளை ஒன்றிணைத்தல்இந்திய அரசு 22 மார்ச் 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பகுதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் ஒரே தில்லி மாநகராட்சியாக நிறுவ சட்ட முன்வடிவத்திற்கு ஒப்புதல் வழங்கியது.[2] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[3] வார்டுகள் இட ஒதுக்கீடு250 வார்டுகளை கொண்ட தில்லி மாநகராட்சியின் 42 வார்டுகள் அட்டவணை சமூகத்தவர்களுக்கும், 50 ச தவீதம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. [4] தேர்தல் அட்டவணைதில்லி அரசின் தேர்தல் ஆணையம் 4 நவம்பர் 2022 அன்று தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[5]
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக வார்டுகளை கைப்பற்றி தில்லி மாநகராட்சியை கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடத்திலும்; இந்திய தேசிய காங்கிரசு மூன்றாம் இடத்திலும் வரும் எனக் கூறப்பட்டது.[6] தேர்தல் முடிவுகள்வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 250 வார்களில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 104 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.[7]
குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia