2022 சில்சார் வெள்ளம்
2022 சில்சார் வெள்ளம் (2022 Silchar Floods) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு அசாம்-வங்காளதேச வெள்ளத்தின் ஒரு பகுதியாக பெத்குண்டியில் பராக் ஆறு உடைந்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் 32 மாவட்டங்களில் 5.4 மில்லியன் மக்களைப் பாதித்தது. [2] 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். [3] [1] சில்சார் நகரம் உடைப்புக்கு வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்ததால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது, நகரத்தின் 90 சதவீதம் நீருக்கடியில் மூழ்கி இருந்தது. [4] இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், [5] வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தின் அளவிற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சில திட்டவட்டமான காரணங்களும் இருந்தன. அப்போதைய அசாம் மாநில முதல்வர் இமந்தா பிசுவா சர்மாவும் மக்களுக்கு ஆற்றிய உரையில் இதை குறிப்பிட்டார். [6] சூலை மாதம் 2 ஆம் தேதியன்று வெள்ளத்தை ஏற்படுத்திய கரையை உடைத்ததற்காக காபூல் கான் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துமீறி அக்காட்சியை ஒளிப்பதிவும் இவர் எடுத்திருந்தார். [7] சூலை 6 ஆம் தேதிக்குள், இதே செயலுக்காக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். [8] அசாம் முதல்வர் இமந்த பிசுவா சர்மா, வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்றும், இதற்குக் காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் கூறினார். [9] இந்தச் செயலை நாசவேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [10] சில்சார் நகரம் 11 நாட்களுக்கு நீரில் மூழ்கியது, சில இடங்களில் தண்ணீர் 12 அடிகள் (3.7 மீட்டர்கள்) வரை உயர்ந்திருந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia