2023 செனயன் நகரத் தீ விபத்து

2023 செனயன் சிட்டி தீ விபத்து
2023 Senayan City Mall fire
நாள்20 ஏப்ரல் 2023
நேரம்18:30 இந்தோனேசிய நேரம் (UTC+7)
காலம்30 நிமிடங்கள்
இடம்செனயன் நகர பேரங்காடி
அமைவிடம்ஜகார்த்தா, இந்தோனேசியா
புவியியல் ஆள்கூற்று6°13′38.60″S 106°47′49.60″E / 6.2273889°S 106.7971111°E / -6.2273889; 106.7971111
காரணம்விசாரணையில் உள்ளது
இறப்புகள்0
காயமுற்றோர்0
சொத்து சேதம்5 உணவகங்கள்

2023 செனயன் சிட்டி தீ விபத்து (2023 Senayan City fire) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள செனயன் சிட்டி என்ற பேரங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தைக் குறிக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று இவ்விபத்து நிகழ்ந்தது. பேரங்காடியின் கீழ் தளத்தில் உள்ள ஓர் உணவகத்தில் தீ பிடித்து அருகில் உள்ள மற்ற நான்கு உணவகங்களுக்கும் பரவியது. பேரங்காடியில் இருந்த தீ தடுப்பு கருவிகளும் வருகை தந்த தீயணைப்பு வீரர்களும் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீயினால் பாதிக்கப்பட்ட உணவகங்களுக்கு சேதம் ஏற்பட்டது. சில வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் புகையை சுவாசிக்கவும் நேரிட்டது. [1]

பின்னணி

செனயன் சிட்டி என்பது ஒரு பேரங்காடி, ஓர் அலுவலக கோபுரம், ஓர் அடுக்குமாடி கோபுரம் மற்றும் ஓர் உணவு விடுதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு-பயன்பாட்டு மேம்பாட்டு வளாகமாகும். 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பேரங்காடி பன்னாட்டு மற்றும் உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உட்பட 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட குத்தகைதாரர்களுடன் ஏழு தளங்களைக் கொண்ட வளாகமாகும். ஜகார்த்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில், கெலோரா பங் கர்னோ விளையாட்டரங்கம் மற்றும் பிளாசா செனயன் மற்றும் எஃப்எக்சு சுதிர்மன் போன்ற பிற வணிக வளாகங்களுக்கு அருகில் இந்த பேரங்காடி அமைந்துள்ளது. [2]

நெருப்பு

20 ஏப்ரல் 2023 அன்று, ரமலான் மாதத்தில், பல வாடிக்கையாளர்கள் பேரங்காடியின் உணவகங்களில் இப்தார் (நோன்பு துறத்தல்) சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. கீழ் தளத்தில் உள்ள வருங் டெக்கோ என்ற உணவகத்தில் தொடங்கிய தீ, அதை ஒட்டிய சுசி டீய், இம்பீரியல் கிச்சன் & திம்சம், சாபு-சாபு அவுசு மற்றும் கிண்டன் பஃபே ஆகிய நான்கு உணவகங்களுக்கும் பரவியது. [3] தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் சில சாட்சிகள் தீ மற்றும் புகையைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறினார். [4]

தீ பேரங்காடியின் தீ தடுப்பு அமைப்பைத் தூண்டியது. இத்தூன்டல் தீயைக் கட்டுப்படுத்த உதவியது. பேரங்காடியின் மற்ற தளங்கள் அல்லது பகுதிகளுக்கு நெருப்பு பரவாமல் தடுக்கவும் உதவியது. பேரங்காடி நிர்வாகம் அவசர அறிவிப்பு அமைப்பையும் செயல்படுத்தி, வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வெளியேறுமாறு அறிவுறுத்தியது. தீ பரவிய சிறிது நேரத்திலேயே வளாகத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஜகார்த்தா தீயணைப்புத் துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். [5]

பின்விளைவு

தீ விபத்து சம்பவத்தை உறுதி செய்த செனயன் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி இயோகன் கிட்டோ, தீயினால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றார். பேரங்காடியின் தீயணைப்பு அமைப்பு சரியாகச் செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தது என்றார். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை அறிய உணவக ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்து சரிசெய்த பிறகு, 21 ஏப்ரல் 2023 அன்று வணிக வளாகம் அதன் இயல்பான செயல்பாட்டைத் தொடங்கியது. உணவகத்திற்கு அருகில் உள்ள சில கடைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருந்தன. [6]

மேற்கோள்கள்

  1. Indonesia, C. N. N. "Senayan City Kebakaran, Pengunjung Mal Dievakuasi". nasional (in இந்தோனேஷியன்). Retrieved 2023-04-23.
  2. "About Us". Senayan City. Retrieved 2023-04-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Mal Senayan City Kebakaran, Sejumlah Gerai Tutup Lebih Awal". Kompas.com. Retrieved 2023-04-22.
  4. "CEO Senayan City Buka Suara soal Kebakaran di Mal Kemarin". Detik.com. Retrieved 2023-04-22.
  5. "Heboh Kebakaran, Ini Pemilik Senayan City dan Mal Mewah Lain". CNBC Indonesia. Retrieved 2023-04-22.
  6. "Kebakaran di Senayan City, Warganet Malah Heboh Penampakan Kuntilanak di Area Parkir: Mau Menyelamatkan Diri Juga Kayaknya!". suara.com (in இந்தோனேஷியன்). 2023-04-21. Retrieved 2023-04-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya