2023 மொகதிசு விடுதி தாக்குதல்
2023 மொகதிசு விடுதி தாக்குதல் (2023 Mogadishu hotel attack) சோமாலியா நாட்டின் மொகதிசு நகரத்தில் உள்ள ஓர் உணவு விடுதியின் மீது 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று நிகழ்ந்த தாக்குதலைக் குறிக்கிறது. இத்தாக்குதலில் பொதுமக்கள் 9 பேரும் மூன்று படை வீரர்களும் கொல்லப்பட்டனர். [1] இந்நிகழ்வின் போது இலிதோ கடற்கரையில் உள்ள பியர்ல் உணவு விடுதி அல்-சபாப் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.[2] பின்னணிஇசுலாமிய ஜிகாதிசுட்டு குழுவான அல்-சபாப் 2006 ஆம் ஆண்டில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. சோமாலிய அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு கடுமையான சரியா சட்டத்தை இவ்வமைப்பு திணிக்க முயன்றது. சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் விடுதிகள், உணவகங்கள், இராணுவ மற்றும் அரசியல் இலக்குகள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டடங்களை குறிவைத்து இந்த இசுலாமிய குழு பல தாக்குதல்களை நடத்தியது. [3] தாக்குதல்9-10 ஜூன் 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதி இரவு, அல்-சபாப் குழுவினர் மொகதிசு நகரத்தின் இலிதோ கடற்கரையில் உள்ள ஒரு விடுதியைத் தாக்கியது. நகரின் இலிதோ கடற்கரையில் உள்ள பிரபலமான உயர்மட்ட பியர்ல் கடற்கரை விடுதியின் உணவகத்தின் மீது ஏழு துப்பாக்கி ஏந்திய நபர்கள் வெடிகுண்டு வெடித்து தாக்குதல் நடத்தினர். [3] அவர்கள் குறைந்தது ஆறு பொதுமக்களையும் மூன்று பாதுகாப்புப் படையினரையும் கொன்றனர். [3] தாக்குதல் நடத்திய அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia