2023 மொராக்கோ நிலநடுக்கம்
2023 மொராக்கோ நிலநடுக்கம் (2023 Morocco earthquake) 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இரவு அட்லாண்டிக்கு மற்றும் மத்தியதரைக் கடல் எல்லையை ஒட்டிய வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இரவு 11.11 மணிக்கு மக்கள் தூக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது.[1] நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. மொராக்கோ நாட்டின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. சக்திவாய்ந்த இந்நில நடுக்கத்தில் 296 எண்ணிக்கைக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று காலையில் தகவல்கள் வெளியாகின.[2] 153 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.[3] மராகேசூக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள அட்லசு மலைத்தொடரின் உயரமான பகுதியான கிராண்டு அட்லசு பகுதியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.[4][5] பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரமே கட்டிடக் குவியலாக காட்சியளிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia