கஞ்சன்சங்கா விரைவுவண்டி விபத்து (Kanchanjunga Express Accident) மேற்கு வங்கத்தின்[1] புது சல்பைகுரியில் சியால்டா செல்லும் கஞ்சன்சங்கா விரைவுவண்டி மீது காலை 15 மணியளவில் சரக்கு இரயில் மோதியதில்[2] 17.06.2024 ஆம் தேதியன்று குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.[3][4]
விபத்தில் சிக்கிய இரயில் அசாம் மாநிலம் சில்சார் நகரத்திலிருந்து மேற்குவங்கத்தின் சியால்டா நகரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இரங்கபாணி இரயில் நிலையம் அருகில் விபத்து நடந்துள்ளது.[5] பின்னால் இருந்து சரக்கு இரயில் மோதியதில் கஞ்சன்சங்கா இரயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளன. சரக்கு இரயிலுக்கான சமிக்ஞையை சரியாக கவனிக்காமல் சரக்கு இரயில் முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காலம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.[6]
பாதிக்கப்பட்டவர்கள்
இந்த மோதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரக்கு ரயிலின் பொறுப்பு ஓட்டுநர்கள் மற்றும் கஞ்சன்சங்கா விரைவு இரயில் மேலாளர் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.[2][5] காயமடைந்தவர்கள் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்விளைவுகள்
இரயில்வே மந்திரி அசுவினி வைசுணவ் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.[7] விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலாம் பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என இரயில்வே அமைச்சகம் அறிவித்தது. தீவிர காயமடைந்தவர்களுக்கு 250000 ரூபாயும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறியது.[8] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இவ்விபத்தில் இறந்தவர்களுக்கு ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்தார்.[9]திரிபுராவில் மாநிலப் து பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாகா அறிவித்தார்.
விபத்தைத் தொடர்ந்து 19 இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 இரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.[10] அதே நாளில் மாலையில் கவுகாத்தி நோக்கிய இரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. மற்ற பாதைகளில் சூன்மாதம் 18 ஆம் தேதியன்று காலை வழக்கம் போல இரயில்கள் ஓடின.[11][12]