அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளின் வரைபடம். சிவப்பு[b] திரம்பு/வான்சுக்கு திட்டமிடப்பட்ட மாநிலங்களைக் குறிக்கிறது. நீலம்[c] ஹாரிஸ்/வால்சுக்கு திட்டமிடப்பட்ட மாநிலங்களைக் குறிக்கிறது. சாம்பல் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலைகளைக் குறிக்கிறது.[6] இலக்கங்கள் ஒதுக்கப்பட்ட வாக்காளர் குழுக்களைக் குறிக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்று 14 ஆண்டுகள் நிரம்பியவரும் மற்றும் 35 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர் ஆவார். இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
முக்கிய போட்டியாளர்கள்
ஜனநாயக கட்சியின் போட்டியாளர்கள்
இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக நடப்பு அதிபர் ஜோ பைடன் இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டீன் பிலிப்ஸ் மற்றும் மரியான் வில்லியம்சன் உள்ளனர்.
பிறகு தன் உடல்நிலை காரணமாக ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.
பிறகு ஜோ பைடன்கமலா ஆரிசுவை ஆதரிக்க அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக் காலம் சனவரி 2025ல் முடிய உள்ளதல், இத்தேர்தல் 5 நவம்பர் 2024 அன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 20 சனவரி 2025 அன்று அமெரிக்க அதிபராக பதவியேற்பார்.
கருத்துக் கணிப்புகள்
சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 இல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனை விட டோனால்ட் டிரம்ப் தெளிவான முன்னிலை பெற்றுள்ளார். ரேஸ் டு தி டபிள்யூஹெச் கருத்துக் கணிப்பின்படி, ஜோபைடனின் 43.8% வாக்குகளும்; டோனால்ட் டிரம்ப் 45.1% வாக்குகளுடன் முன்னிலை பெற்று அதிகாரத்தைத் தக்கவைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
The Economist செய்தி நிறுவனம் வித்தியாசமாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெல்வதற்கு 63% வாய்ப்பு உள்ளது என்றும் அதே சமயம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெல்வதற்கு 10% வாய்ப்பு மட்டுமே உள்ளது என கணித்துள்ளது.[12]
முடிவுகள்
தொனால்ட் திரம்பு 30 மாநிலங்களையும் கமலா ஆரிசு 18 மாநிலங்களையும் வென்றனர், இம்மாநிலங்களில் வெற்றி பெற்றால் அம்மாநிலங்களின் மொத்த தேர்வாளர்கள் வாக்கும் வென்ற வேட்பாளருக்கே செல்லும். நெப்ராசுக்கா, மெய்ன் ஆகிய மாநிலங்களில் தேர்வாளர்கள் வாக்கு பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இருவருக்கும் செல்லும், அவ்வகையில் வாக்குகளை இருவரும் பங்கு போட்டுக்கொண்டனர்.
↑This tally only reflects projections made unanimously by ABC,[2] Associated Press,[1] CBS,[3] CNN,[4] and NBC.[5]
↑Dark red for states where ABC, AP, CBS, CNN, and NBC have all projected a win; light red for states where only a majority of these sources have projected a win.
↑Dark blue for states where ABC, AP, சிபிஎஸ், CNN, and NBC have all projected a win; light blue for states where only a majority of these sources have projected a win.