2025 கனடா நாடாளுமன்றத் தேர்தல் (2025 Canadian federal election), கனடாவின் 45வது நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபைக்கு 343 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆகும்.[2] இத்தேர்தல் 28 ஏப்ரல் 2025 அன்று கனடாவில் நடை பெறுகிறது. இத்தேர்தலில் 172 இடங்களில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவுடன் கனடா பிரதம அமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார்.[3]
பின்னணி
கனடா பிரதம அமைச்சர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையை கலைப்பதாக பரிந்துரை செய்ததை ஏற்று கனடா கவர்னர் ஜெனரல் மேரி சிம்சன்ஸ் காமன்ஸ் சபையை 23 மார்ச் 2025 அன்று கலைத்தார்.
கனடா நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 343 இடங்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 172 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகளின்படி எக்கட்சியும் பெரும்பான்மை இடங்கள் பெறவில்லை.[4] எனவே கனடா லிபரல் கட்சி தலைவரான மார்க் கார்னி தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சீக்கியர் மற்றும் காலிஸ்தானிகளின் ஆதரவு பெற்றவரான ஜெக்மீத் சிங்கின் தலைமையிலான கனடா புதிய ஜனநாயகக் கட்சி சென்ற தேர்தலில் 17.82% வாக்குகள் பெற்று 25 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றது. 2025 தேர்தலில் ஜெக்மீத் சிங் தோல்வி அடைந்ததுடன், அவரது கட்சி 2% வாக்குகள் பெற்று, 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.[5]இருப்பினும் இத்தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட 65 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இந்துகள் மற்றும் சீக்கியர்களில் 22 வெற்றி பெற்றுள்ளனர். அதில் 12 பேர் கனடா லிபரல் கட்சி சார்பிலும்; 10 பேர் கனடா பழமைவாதக் கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[6]
2025 கனடா நாடாளுமன்றத் தேர்தலில் கனடா அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் பெற்ற வாக்கு சதவீதம் விவரம் பின்வருமாறு: