969 இயக்கம்
969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில்[1][2] இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும்.[3] பர்மாவின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு அசின் விராத்து தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார். இவ்வியக்கம் பர்மாவிலும்,[4] வெளியிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பன்னாட்டு ஊடகங்களில் பெரும் விமரிசனத்துக்குள்ளாகியது.[5] பெயர்க் காரணம்969 என்ற மூன்று எண்கள் புத்தரின் ஒழுக்கம், பௌத்தக் கொள்கைகள், பௌத்த சமூகம் ஆகியவற்றைக் குறிக்கிறது."[3][1][6] இவற்றில் முதலாவது 9 என்ற எண் கௌதம புத்தரின் ஒன்பது சிறப்புப் பண்புகளையும், 6 இலக்கம் புத்தரின் அறம் பற்றிய ஆறு சிறப்புக் கூறுகளையும், கடைசி 9 இலக்கம் பௌத்த சங்கத்தின் (துறவிகள்) ஒன்பது சிறப்புக் கூறுகளையும் குறிக்கிறது. இந்த சிறப்புக் கூறுகள் புத்தரின் திரிரத்தினங்கள் எனக் கூறப்படுகிறது.[7] முன்னெடுப்புகள்பௌத்த மதப் பெண்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் பௌத்தரல்லாத ஆண்களைத் திருமணம் முடிக்கத் தடை செய்யக் கோரும் சட்டத்தைக் கொண்டு வர 969 இயக்கம் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.[8] பொது பல சேனாவுடன் கூட்டு2014 செப்டம்பர் 29 இல் இலங்கையின் பொது பல சேனா என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பு கொழும்பில் நடத்திய சங்க மாநாட்டில் 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராத்து தேரர் கலந்து கொண்டு உரையாற்றினார். தீவிரவாதமற்ற ஆசியப் பிராந்தியம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் இரு இயக்கங்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புத்தசாசனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தாம் ஒன்றிணைந்திருப்பதாக விராத்து தேரர் குறிப்பிட்டார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia