அங்காரகன் (2023 திரைப்படம்)
அங்காரகன் (Angaaragan) 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். மோகன் தச்சு எழுதி இயக்கிய இப்படத்தில் சிறீபதி கே.ஏ., சத்யராஜ், நியா சங்கரத்தில், ரெய்னா கரத், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருந்தனர். ஜூலியன் & ஜெரோமா பிலிம் கம்பெனி, பிரைம்ரோசு எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கீழ் ஜீனா ஜோமோன், ஜோமோன் பிலிப் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். [1] நடிகர்கள்
தயாரிப்புஇப்படம் இயக்குநர் மோகன் தச்சுவுக்கு அறிமுகத் திரைப்படம்.[2] படத்தின் தயாரிப்பாளர்கள் சத்யராஜ் எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவித்திருந்தனர் [3] இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவினால் யூ/ஏ சான்றிதழைப் பெற்றது.[4] வரவேற்புஇத்திரைப்படம் 2023 செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது.[5] கதையின் பெரும்பகுதி இரவில் நடப்பதால், இயக்குநர் மோகன் தச்சு காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருப்பதாகவும், இசையமைப்பாளர் கே.கார்த்திக் இரசிகர்களை ஓரளவிற்கு பயமுறுத்த முயற்சிக்கிறார் என்றும் மாலை மலரின் விமர்சகர் ஒருவர் எழுதியுள்ளார்.[6] தந்தி டிவி ஒரு விமர்சகர் கலவையான விமர்சனத்தை வழங்கியிருந்தார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia