அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு
அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு (Abnormal uterine bleeding) என்பது கருப்பையிலிருந்து அடிக்கடி, நீட்டித்தகாலத்திற்கு, வழக்கத்தைவிட அதிகமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதைக் குறிக்கிறது.[1][3]கருத்தரிக்கும் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு இவ்வகையில் சேராது..[3] இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்தசோகை காரணமாகக்கூட அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம். இது வழக்கமான வாழ்வியல் முறையை வெகுவாக எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும். [2] கருப்பை நார்த்திசுக் கட்டி, கருப்பைச் சுவரின் அகப்படலம் வளருதல்,கருப்பைப் பிரச்சனைகள், மாதவிடாய்ச் சிக்கல்கள், உள்ளுறுப்புகளில் இரத்தம் ஒழுகுதல், சினை முட்டை வருவதில் பிரச்சினை, குடும்பக்கட்டுப்படு அல்லது புற்றுநோயின் பக்கவிளைவுகள் ஆகியவை உள்ளிட்ட கருவூலகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகள் அசாதாரண இரத்தப்போக்கிற்குக் காரணமாக இருக்கலாம்.[3] தனி ஒருவருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணமாகவோ அல்லது மேற்கண்டவற்றில் சிலவோ அசாதாரண இரத்தப்போக்கிற்குக் காரணமாக அமையலாம். [3] இதன் முதல்படியாக கட்டி அல்லது கரு அகற்றப்படுகிறது.[5][3] மருத்துவப்படமெடுத்தல் அல்லது கருப்பை அகநோக்குதல் மூலம் இதனைக் கண்டறிய உதவலாம். [2] ஒவ்வொரு விளைவுகளும் ஏற்படும் அடிப்படைக் காரணத்திற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.[3][2] இயக்குநீர்முறை கருத்தடை, கோனடாட்ராபின் - முதன்மை இயக்கியை தூண்டுதல், டிரானெக்சாமின் அமிலம் ஆகியனவும், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை நீக்குதல், அல்லது கருப்பை அகற்றுதல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன.[1][5] இனப்பெருக்க வயதிலுள்ள 20 விழுக்காடு பெண்களுக்கு அசாதாரண இரத்தப்போக்கு காணப்படுகிறது.[2] References
|
Portal di Ensiklopedia Dunia