அரிதா கவுர் தியோல்
அரிதா கவுர் தியோல் (Harita Kaur Deol) இந்திய விமானப்படையில் ஒரு விமானியாக இருந்தார். இந்திய விமானப் படையில் தனியாகப் பறந்த முதல் பெண் விமானி என்ற சிறப்புக்கு உரியவராகவும் இருந்தார். விமானம் 2 செப்டம்பர் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று அவ்ரோ எச். எசு-748 என்ற நடுத்தர அளவு விமானத்தில் தனக்கு 22 வயதாக இருந்த போது இவர் தனியாக விமானத்தில் பறந்தார்.[1][2][3][4] தொழில்அரித்தா கவுர் தியோல் ஒரு சீக்கிய குடும்பத்தில் சண்டிகரில் இருந்து இவர் விமானியாக வந்தார், 1993 ஆம் ஆண்டில் குறுகிய சேவை ஆணைய அதிகாரிகளாக விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஏழு பெண் படைப்பயிற்சியாளர்களில் இவரும் ஒருவரானார். இந்தியாவில் பெண்களுக்கு போக்குவரத்து விமானிகளாகப் பயிற்சி அளிப்பதில் இது ஒரு முக்கியமான கட்டத்தைக் குறித்தது. ஐதராபாத் நகரத்திற்கு அருகே உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். பிறகு, எலகங்கா விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர் லிஃப்ட் ஃபோர்சு பயிற்சி நிறுவனத்தில் மேற்கொண்டு பயிற்சியை தொடர்ந்து பெற்றார். [5] இறப்பு1996 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று நெல்லூர் அருகே விமான விபத்தில் தன்னுடைய 24 வயதில் இறந்தார்.[6] ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புக்காபுரம் கிராமம் அருகே இந்திய விமானப்படையின் அவ்ரோ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 24 விமானப்படை வீரர்களில் இவரும் ஒருவராவார். [7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia