பிரகாசம் மாவட்டம்
![]() பிரகாசம், (தெலுங்கு: ప్రకాశం) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்று. ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 14,323 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2011 இல் 22,88,026 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம் மற்றும் கர்னூல் மாவட்டம் ஆகிய மாவட்டப் பகுதிகளைக் கொண்டு பெப்ரவரி 2, 1970 இல் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது. மாவட்டம் பிரிப்புஇம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய பாபட்லா மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4] ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை 38 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5] அரசியல்![]() ![]() ![]() ![]() இம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி, பாபட்ல மக்களவைத் தொகுதி மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[6]
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia