அறிவியலாளர்
அறிவியலாளர், அறிவியல் அறிஞர், அல்லது விஞ்ஞானி (scientist) எனப்படுபவர் தமக்கு ஆர்வமுள்ள பகுதியில் அறிவை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வை மேற்கொள்பவர் ஆவார்.[1][2] அறிவியலாளர்கள் பல வழிகளில் வேலை செய்யத் தூண்டப்படுகிறார்கள். நாம் பார்க்கும் உலகம் எப்படி உருவானது என்பதைப் புரிந்து கொள்ள விருப்பம் கொண்டு, உண்மைநிலை பற்றிய வலுவான ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இயற்கை அறிவியலின் முன்னோடியான இயல் மெய்யியல் எனப்படும் இயற்கையின் மெய்யியல் ஆய்வில் மெய்யியலாளர்கள் ஈடுபட்டனர்.[3] தேலேசு (அண். கிமு 624-545) அண்ட நிகழ்வுகள் கடவுள்களால் ஏற்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவை எவ்வாறு இயற்கையானவையாகக் காணப்படுகின்றன என்பதை விளக்கிய முதல் அறிவியலாளராக இருந்தார்.[4][5][6][7][8][9] 1833 ஆம் ஆண்டில் இறையியலாளரும், மெய்யியலாளரும், அறிவியல் வரலாற்றாசிரியருமான வில்லியம் ஹியூவெல் என்பவர் பயன்படுத்திய பின்னரே 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அறிவியலாளர் என்ற சொல் வழக்கமான பயன்பாட்டுக்கு வந்தது.[10][11] தற்காலத்தில், பல அறிவியலாளர்கள் அறிவியல் துறையில் மேம்பட்ட பட்டங்களைப்[12] பெற்றுள்ளனர், அத்துடன் கல்வித்துறை, தொழில்துறை, அரசு மற்றும் இலாப நோக்கற்ற சூழல்கள் போன்ற பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பணிகளைத் தொடர்கின்றனர்.[13][14][15][15] வரலாறு"அறிவியலாளர்கள்" மற்றும் அவர்களின் முன்னோடிகள் ஆகியோருக்கு இன்றைய நிலையில் பல்வேறு அறிவியல் துறைகள் கணிசமாக உருவாகியுள்ளன. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் (அவர்களுக்கு முன், இயற்கை மெய்யியலாளர்கள், கணிதவியலாளர்கள், இயற்கை வரலாற்றாசிரியர்கள், இயற்கை இறையியலாளர்கள், பொறியியலாளர்கள், அறிவியலின் வளர்ச்சிக்கு பங்களித்த மற்றவர்கள் ஆகியோர்) சமூகத்தில் பரவலாக வேறுபட்ட இடங்களைக் கொண்டிருந்தனர். அத்துடன் சமூக விதிமுறைகள், விழுமியங்கள், அறிவியலாளர்களுடன் தொடர்புடைய நல்லொழுக்கங்கள் - மற்றும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவை - காலப்போக்கில் மாறியுள்ளன. அதன்படி, நவீன அறிவியலின் எந்தப் பண்புகள் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன என்பதைப் பொறுத்து, பல்வேறு வரலாற்று நபர்களை ஆரம்பகால அறிவியலாளர்களாக அடையாளம் காணலாம். சில வரலாற்றாசிரியர்கள் நவீன வடிவத்தில் அடையாளம் காணக்கூடிய அறிவியல் வளர்ந்த காலகட்டமாக 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவியல் புரட்சியை சுட்டிக்காட்டுகின்றனர். 19-ஆம் நூற்றாண்டு வரை அறிவியலாளர்கள் ஒரு முக்கியத் தொழில் புரிபவராக வெளிப்படுவதற்கு போதுமான சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.[16] அறிவியலாளருக்கான விளக்கம்அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவையே மனித வாழ்க்கையை தொடர்ந்து மாற்றி அமைத்துள்ளன. தொழில்ரீதியாக இன்றைய அறிவியல் அறிஞர் பரவலாக அங்கீகரிக்கப்படுகின்றனர். முக்கியமாக தற்போதுள்ள புள்ளிவிவரங்களைக்கொண்டு புதிய மாதிரிகளை உருவாக்கி புதிய விளைவுகளை முன்னதாகக் கூறுபவர், மற்றும் முக்கியமாக மாதிரிகளை அளந்தறிந்து சோதனை செய்யும் சோதனையாளர்கள் ஆகிய கருத்தியலாளர்கள் — செயல்வடிவில் இவ்விரு பிரிவினர்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லையாயினும் அறிவியல் அறிஞர்களில் அடங்குவர். மேலும், பல அறிவியல் அறிஞர்கள் இரண்டு வேலைகளையும் செய்கின்றனர். கணிதம் பொதுவாக அறிவியல் பிரிவிலேயே சேர்க்கப்படுகிறது. மற்ற அறிவியல் அறிஞர்களைப்போல் கணித வல்லுநர்கள் கருதுகோள்களில் தொடங்கி பிறகு அவைகளைச் சோதிக்க குறியீட்டு அல்லது கணக்கீட்டு சோதனைகளைச் செய்பவர். மிகச்சிறந்த இயற்பியல் வல்லுநர்களில் சிலர் ஆக்கமிக்க கணித வல்லுநர்களாக இருந்துள்ளனர். அதிகத் திறனுள்ள கருத்தியலாளர்களுக்கும் அதிகத் திறனுள்ள செயல்வடிவ அறிவியல் அறிஞர்களுக்கும் இடையில் அறுதியிட்டுக் கூறும்படியான வேறுபாடுகள் இன்றி ஒரு தொடர்தன்மை உள்ளது. ஆளுமை, ஆர்வம், பயிற்சி மற்றும் தொழில்ரீதியான செயல் ஆகியவற்றில் செயல்வடிவ கணித வல்லுநர்கள் மற்றும் கருத்தியல் இயற்பியல் வல்லுநர்கள் ஆகியோருக்கிடையில் வேறுபாடு இல்லை. அறிவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும்பொதுமக்கள் பார்வையில் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஆகிய இரு பிரிவு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது, முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது செயல்வடிவ அறிவியல் என்பதற்கு மிகவும் தொடர்புடையதாக உள்ளது. அறிவியல் அறிஞர்கள் பொது விதிகளைக்காண இயற்கையை ஆரய்கின்றபோது, பொறியியல் வல்லுநர்கள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கவும் பழையனவற்றை சீர்படுத்தவும் அறிவியல் மூலம் நிறுவப்பட்ட அடிப்படைக் கருத்துக்களை பயன்படுத்துகின்றனர். சுருங்கக்கூறின், அறிவியல் அறிஞர்கள் பொருள்களை ஆராய்கின்றபோது பொறியியல் வல்லுநர்கள் பொருள்களை வடிவமைக்கின்றனர். இருப்பினும், ஒருவராலேயே இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளதற்கான ஆதரங்கள் நிறைய உள்ளன. ஒரு அறிவியல் அறிஞருக்கு பொறியியல் கல்வியும் இருந்தால், அதே நபர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும் இயற்கையின் அடிப்படைக் கருத்துக்களை ஆராய்வார். அறிவியல் அறிஞர்கள் சோதனைக் கருவிகளை வடிவமைத்து மூல முன் மாதிரிகளை உருவாக்க சில பொறியியல் செயல்களில் ஈடுபடுகின்றபோது, சில பொறியியல் வல்லுநர்கள் முதல்தரமான அறிவியல் ஆராய்ச்சி செய்கின்றனர். உயிர்களில் மருத்துவ ஆய்வு, எந்திரவியல், மின்னியல், வேதியியல், மற்றும் விண்வெளிப் பெறியியல் ஆகிய பொறியியல் வல்லுநர்கள் பெரும்பாலும் புதிய முறைகளையும் பொருள்களையும் அறிவியல் மூலம் கண்டுபிடிப்பதின் நுழைவாயிலில் உள்ளனர். பீட்டர் தெபை வேதியியலில் ஒரு நோபல் பரிசு பெறுவதற்கு முன்னால் மின் பொறியியலில் ஒரு பட்டமும் இயற்பியலில் ஒரு முனைவர் பட்டமும் பெற்றார். அவ்வாறே, பால் டிராக், எந்திர அளவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர், கணிதத் துறைக்குச் சென்று பின்பு ஒரு கருத்தியல் இயற்பியல் துறைக்கு வருவதற்கு முன்னால் அவரது கல்விப்பணியை ஒரு மின்பொறியியல் வல்லுநராக தொடங்கினார். கிளௌட் சன்னான், ஒரு கருத்தியல் பொறியியல் வல்லுநர், தற்கால தகவல் கருத்தியலை கண்டுபிடித்தார். வரலாற்று வளர்ச்சிஅறிவியல் அறிஞர்களின் சமூகப் பணியும், தற்கால அறிவியல் துறைகள் தோன்றுவதற்கு முன்பாக இருந்த அவர்களுடைய முன்னோர்களது பணியும், அதிகமாகவே உள்ளது. பல்வேறு காலகட்டத்தின் அறிவியல் அறிஞர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவை—திடீரென மாறிவிட்டன. தற்கால அறிவியல் கருத்துகளின் தேவைகளின் அடிப்படையில் பல வெவ்வேறு வரலாற்றாளர்களை முற்கால அறிவியல் அறிஞர்களாக அடையாளங்காணலாம். சில வரலாற்றாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டை தற்காலத்தில் உள்ளதுபோல் அறிவியல் வளர்ச்சியடைந்த காலம் என குறிப்பிடுகின்றனர் (பிரபலமாக அறிவியல் புரட்சி என்று கூறப்படுவது), எனவே அறிவியல் அறிஞர்கள் என கருதப்படுபவரைக் கண்டது எப்போது எனக் காணவேண்டியுள்ளது. பண்டைக்கால மற்றும் இடைக்கால அறிவியல் மரபார்ந்த பண்டைத் தன்மையின் இயற்கை பற்றிய அறிவுசார்ந்த சோதனை பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. அறிவியலுக்கு கிரேக்கர்களின் பங்களிப்பு—வடிவியல் மற்றும் கணித வானவியல், உயிரியல் முறைகள் மற்றும் தாவரங்கள், விலங்குகளின் அட்டவணைப்பற்றிய ஆரம்பகால குறிப்புகள், அறிவு, கற்றல் கருத்தியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை—தத்துவமேதைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோராலும் பல தொழில் செய்தவராலும் வழங்கப்பட்டது. இவைகளும், ரோமானியப் பேரரசு பரவியதாலும், கிறித்துவ மதம் பரவியதாலும் ஏற்பட்ட அறிவியல் அறிவோடு அவர்களுக்குள்ள தொடர்பும் ஐரோப்பாவின் பெரும்பாலானப் பகுதியின் மதப் பயிலகங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. இடைக்கால பல்கலைக்கழக முறை ஏற்பட்டபோது, இயற்கை தத்துவம் அடங்கிய மூன்று தொகுதி —தத்துவம் மற்றும் வானவியலை உள்ளடக்கிய நான்கு தொகுதி —கணிதம் என அறிவானது பிரிக்கப்பட்டது. எனவே, இடைக்கால அறிவியல் அறிஞர்களின் ஒப்புமை உடையவர்கள் தத்துவ மேதைகளாகவோ அல்லது கணித வல்லுநர்களாகவோ இருந்தனர். தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அறிவு மருத்துவர்களின் பணியில் அதிக இடத்தைப் பிடித்தது. இடைக்கால இசுலாமிய அறிவியல் தத்துவமேதை மற்றும் கணித வல்லுநர் போன்ற தற்போதுள்ள சமூக அமைப்பு எல்லைகளுக்கு உள்ளாகவே இயற்கை அறிவை வளர்ப்பதில் சில புதிய வழிமுறைகளை உருவாக்கியது, பரிசோதனை முறையை வலியுறுத்திய ஒரு ஆரம்பகால அறிவியல் முறை பலதுறை அறிவுகூர்மையுள்ள பெர்ஷியன் தத்துவமேதை மற்றும் வானவியலறிஞர்-கணிதவல்லுநர் இப்ன் அல்-ஹைதம் (அல்ஹஜென்) என்பவரால், கி.பி.1021ஆம் ஆண்டில் , அவருடைய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூலின்மூலம் வளர்ச்சியடைந்தது ,இதன் காரணமாக அவர் "முதல் அறிவியல் அறிஞர்" என விவரிக்கப்பட்டுள்ளார்.[17] இஸ்லாமிய பொற்காலம் மற்றும் இடைக்காலம் மற்றும் ஐரோப்பிய மறுமலர்ச்சிகால பல முன்னோடி-அறிவியலறிஞர்கள், தற்கால அறிவியல் பகுதிகள் சார்ந்த ஏதேனும் ஒரு குறைபாட்டால் ஓரளவு பலதுறை அறிஞர்களாகக் கருதப்படுகின்றனர். வரலாற்று அறிவியலறிஞர்கள்![]() ![]() ![]() ![]() டெஸ்கார்டெஸ் பகுமுறை வடிவியலின் முன்னோடியாக மட்டுமின்றி எந்திரவியல் கருத்தியல் ஒன்றையும் விலங்கின் இடப்பெயற்சி மற்றும் உய்த்துணர்தல் தோற்றம் பற்றிய மிக முன்னேறிய கருத்துகளையும் உருவாக்கினார். கண்பார்வை, காது கேட்டல் மற்றும் இசை ஆகியவற்றையும் கூட ஆய்ந்தறிந்த மருத்துவர்கள் யங் மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஜ்க்கு பார்வைப்பகுதியில் ஆர்வம் ஏற்பட்டது, நியூட்டன் (அதேகாலத்தில் இருந்த லெய்ப்னிஜ் உடன் இணைந்து) நுண்கணிதம் கண்டுபிடிப்பால் டெஸ்கார்ட்ஸின் கணிதத்தினை விரிவுபடுத்தினார். அவர் மரபார்ந்த எந்திரவியலுக்கு ஒரு தெளிவான உருவம் கொடுத்து ஒளி மற்றும் கண் பார்வை பற்றி ஆரய்ந்தார். ஃபோரியர் கணிதத்தில் ஒரு புதிய பிரிவினைக் கண்டுபிடித்தார் — அளவிலி, சுழல் வகை தொடர்கள் — வெப்பம் திரவஓட்டம் மற்றும் அகச்சிவப்புக் கதிர்வீச்சு ஆகியவற்றை ஆராய்ந்து, பைங்குடில் விளைவு என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார். வொன் நியூமேன், டர்னிங், கின்சின், மார்கோவ் மற்றும் வீனர், அனைவரும் கணிதமேதைகள், கணினிகள் சர்ந்த கருத்துகள், புள்ளிவிவர எந்திரவியல் மற்றும் அளவு எந்திரவியல் சார்ந்த சில கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய அறிவியலிலும் நிகழ்தகவு கருத்தியல் எனும் கணிதப்பிரிவிலும் அவர்களது பங்களிப்பு மிக அதிகம். கணித தொடர்புள்ள பல அறிவியலறிஞர்கள், கலிலியோவையும் சேர்த்து, இசையாளர்களாகவும் இருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லூயிஸ் பாஸ்டர், ஒரு கரிம வேதியியல் வல்லுநர், நுண்ணுயிரிகள் வியாதிக்கு காரணமாகலாம் எனக் கண்டறிந்தார். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ், சகோ., அமெரிக்க மருத்துவர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர், குழந்தை பிறப்புக்குப்பின் பெண்களிடத்தில் ஏற்படும் இரத்த நச்சுப்பாடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கைகள் மூலம் பரப்பப்பட்டது என ஸெம்மெல்வெய்ஸ் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடித்தார். மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றில், இரத்த ஓட்டம் பற்றிய கருத்துக்களின் வளர்ச்சி கேலனிடமிருந்து ஹார்விக்கு வந்தது எனக் கூறுவது போன்ற பல வலியுறுத்திக் கூறும் கதைகள் உள்ளன. 20ஆம் நுற்றாண்டில் தோன்றிய மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் பலரறிந்த பெயர்களில் அதிக அளவில் உள்ளன. ராமோன் ஒய் கஜல் உடற்கூற்றுநரம்பியல் என்பதில் அவரது மெச்சும்படியான கண்டுபிடிப்புகளுக்காக 1906ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். சோதனை அறிவியல்களையும் வானவியல், வானிலை ஆய்வியல், கடலியல் மற்றும் நிலநடுக்க இயல் போன்ற "கூர்ந்துநோக்கும்" அறிவியல்களையும் சிலர் இருபிரிவாகப் பார்க்கின்றனர். ஆனால் வானியலறிஞர்கள் கண்பார்வை சார்ந்து அடிப்படை ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர், விசை-இணைப்பு கருவிகளை தயாரித்தனர், மேலும் சமீப பத்தாண்டுகளில் ஹப்ல் டெலஸ்கோப்பை பயன்படுத்தி சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிவதுடன் மற்ற கிரகங்களை ஆராய விண்வெளி ஆய்வுகருவிகளை அனுப்பியுள்ளனர். கூர்ந்தறிந்த புள்ளிவிவரங்களை உறுதி செய்து வேதியியலில் ஒரு புதிய பகுதியைத் தொடங்க தேவையான சோதனைச்சாலை பரிசோதனைகள் மற்றும் கணினி மாதிரி ஆகிய தேவைகளைக் கொண்ட கனிம மூலக்கூறுகளை டஜன் கணக்கில் இப்பொது நுண்ணலை நிறப்பிரிகை அகநட்சத்திர வெளியில் கண்டுபிடித்துள்ளது. கணினி மாதிரி வடிவமைப்பு மற்றும் எண் முறைகள், அளவு அறிவியல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள மாணவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களாகும். அறிவியலை ஒரு தொழிலாகக் கருதுபவர்கள் பொதுவாக எல்லைகளை நோக்குகின்றனர். இவற்றில் அண்டவியல் மற்றும் உயிரியல், குறிப்பாக நுண்ணுயிர் உயிரியல் மற்றும் மனித மரபுத்தொகுதித் திட்டம் ஆகியவை அடங்கும். மற்ற தீவிர ஆராய்ச்சிப் பகுதியில், அதி-சக்தி இயற்பியல் விவரித்துள்ளபடி தொடக்கநிலை துகள்கள் நிலையில் ஜடப்பொருள் ஆய்வு, மற்றும் மிகநுண்ணிய கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை உள்ளடக்கிய மின்னணுவியலை வளர்க்கும் .நானோ தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். மூளைச் செயல்பாடு மற்றும் நரம்புவழி செய்தி பரவல்கள் சார்ந்து மெச்சத்தக்க கண்டுபிடிப்புகள் இருப்பினும், உள்ளம் மற்றும் மனித எண்ணம் ஆகியவற்றின் தன்மை இப்போதும் தெரியாததாகவே உள்ளன. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களோடு, சமீப காலங்களில் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்குகொண்டுள்ள மிகச்சிறந்த இருபால் அறிவியலறிஞர்கள் உள்ளனர். மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia