ஆகத்து 2021 பலுசிசுதான் தாக்குதல்ஆகத்து 2021 பலுசிசுதான் தாக்குதல் (August 2021 Balochistan attacks) ஆகத்து மாதம் 26 ஆம் தேதி பாக்கித்தான் நாட்டின் சியாரத்து மற்றும் பஞ்ச்கூர் மாவட்டங்களில் நிகழ்ந்தது. பலூச்சு கிளர்ச்சியாளர்கள் நடத்திய இத்தாக்குதலில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். [1] சியாரத் குண்டு வெடிப்புமங்கி அணையில் பணிபுரியும் நான்கு தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக பலுசிசுத்தான் நகரில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகின்ற லெவிசு படைக்கு தகவல்கள் கிடைத்தன. தொழிலாளர்களை மீட்க லெவிசு படையின் ஒரு குழு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இருப்பினும் கடத்தல்காரர்களின் வாகனத்தைத் துரத்திச் சென்றபோது ஒரு லெவிசு அதிகாரி கண்ணிவெடியால் தாக்கப்பட்டார். குண்டுவெடிப்பில் மூன்று லெவிசு வீரர்கள் கொல்லப்பட்டனர் வாகனத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்தனர். கடத்தல்காரர்கள் இரண்டு தொழிலாளர்களை லெவிசு படையினர் துரத்தத் தொடங்கியபோது விடுவித்தனர்.[2] எதிர்ப்புகள்லெவிசு தியாகிகளின் வாரிசுகள், சியாரத்து, அர்னாய், சஞ்சாவி மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பழங்குடியினர்கள் ஒன்றாகச் சேர்ந்து இறந்த உடல்களை குச் மோர், சியாரத்து, குவெட்டா அருகே உள்ள பிரதான நெடுஞ்சாலையில் வைத்து அனைத்து வகையான போக்குவரத்தினையும் நிறுத்தும் வகையில் நெடுஞ்சாலையை மூடினர். வடக்கு பலுசிசுதானின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டது. நீதித்துறை ஆணையம் அமைக்கும் வரை உடல்களை புதைக்க முடியாது என்று போராட்டக்காரர்கள் கூறினர். [3] குவெட்டா நகரத்திலிருந்து சியாரத்து, சஞ்சாவி, தாக்கி, கோக்லு, அரனாய், சாராக், உலோராலாய் பகுதிகளுக்குப் பயணித்தவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். [4] கடையடைப்பு போராட்டங்கள் சியாரத்து, முசுலீம் பாக், கனோயாய், கிலா சைஃபுல்லா, சோப் மற்றும் லோரலாய் பகுதிகளில் நடைபெற்றது. கடைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. [5] பஞ்ச்கூர் தாக்குதல்பாக்கித்தான் எல்லைக்காவல் படைவீரர் ஒருவர் பஞ்ச்கூர் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒம்மாவட்டத்தின் குவார்கு பகுதியில் மூன்று பேர் காயமடைந்தனர். எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் வாகனம் இப்பகுதியின் வழியாக செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு இங்கு தாக்குதல் நிகழ்ந்தது. காயமடைந்தவர்கள் பஞ்ச்கூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். [6] [7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia