ஆர்டிகில் 15 (இந்தி திரைப்படம்)
ஆர்டிகில் 15 (Article 15) இது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி திரைப்படம் ஆகும். இதன் கதையை குருதேவ் சோலங்கியும், அனுபவ் சின்ஹாவும் எழுதியுள்ளார்கள். இதன் இயக்குநர் அனுபவ் சின்ஹா ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக ஆசுமான் குரானா கதாநாயகியாக இஷா தல்வார் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். இப்படம் ஒரு குற்ற பிண்ணனியை வெளிப்படுத்தும் கதைக்களத்தைக் கொண்டதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்னதான் அனைவரும் சமம் என்று கூறினாலும் இன்னமும் சாதி, மதம், இனம், மற்றும் மொழியால் இந்தியமக்கள் பிளவுபட்டுகிடப்பதை இப்படம் எடுத்துரைக்கிறது. 2014 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் இரண்டு ஏழை குழந்தைகளுக்கு நடந்த பாலியல் வண்கொடுமையையும் 2016 ஆம் ஆண்டு குசராத்து மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட வன்முறையையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது. கதைஇந்தியக் காவல் பணியில் முதன் முதலாக பயிற்சிகுப்பின் லாசால்கான் என்ற ஊரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக அயன் ரஞ்சன் பதவி ஏற்கிறார். அந்த ஊரில் இரண்டு ஏழைச் சிறுமிகள் கெடுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காட்டில் உள்ள மரக்கிளையில் கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பை தானே முன்னின்று நடத்துகிறார் ரஞ்சன். இதற்கு காவல் நிலையத்தில் தனக்கு கீழ் வேலைபார்க்கும் காவலர்களே ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஏனெனில் அனைவரும் சாதியின் தீவிரம் பேசுபவர்களாகவே உள்ளார்கள். அதோடு அவ்வூரில் உள்ள உயர் சாதியினரின் குறுக்கீடும் விசாரணைக்கு தடைபோடுகிறது. ஆனாலும் அவ்வூரில் நடக்கும் வன்முறையை தடுத்து நிறுத்துகிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia