ஆலம்கிர் கபீர் (அரசியல்வாதி)
ஆலம்கிர் கபீர் (AlamgirKabir) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] வங்காளதேச தேசியவாதக் கட்சி அரசியல்வாதியாகவும் நவோகான்-6 தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்படுகிறார்.[2][3] வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களின் மாநில அமைச்சராகவும் ஆலம்கிர் கபீர் பணியாற்றியுள்ளார்.[4] தொழில்ஆலம்கிர் கபீர் 1991, 1996, மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் வங்காளதேசத்தின் தேசியவாதக் கட்சி வேட்பாளராக நவோகான்-6 தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2007 ஆம் ஆண்டில் இயமாத்-உல்-முச்சாகிதின் வங்காளதேசம் என்ற இசுலாமிய பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.[6] வங்காளதேச தேசியவாதக் கட்சியால் 11 ஆவது இயாதியா சங்கத் தேர்தலில் நவோகான் தொகுதியில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia