ஆளி (செடி)
ஆளிச் செடி (Flax) நாருக்காகவும் வித்திற்காகவும் சாகுபடி செய்யப்படும் ஒரு செடியாகும். இதன் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum) என்பதாகும். கருங்கடலுக்கும் காசுபியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் இது ஆதியில் வளர்ந்தது எனக் கருதப்படுகிறது. ஆளிச் செடியின் விவரங்கள்நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள், 5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய். ஆளிச் செடியின் நார், சணல் என்று தமிழில் வழங்கப்படுகின்றது. ![]() பயன்பாடுகள்விதைக்காகவும் நாருக்காவும் ஆளி வளர்க்கப்படுகின்றது. செடியின் பல்வேறு பகுதிகள் நார், சாயம், மருந்துகள், மீன்வலை மற்றும் சவர்க்காரம் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பூங்காக்களில் ஒரு அலங்காரச் செடியாகவும் கருதப்படும் ஆளியின் முழு நீல நிறம் அதன் தனித்தன்மை; ஒரு சில பூக்களே முழு நீல நிறம் உடையன; பெரும்பாலான நீல நிறப் பூக்களில் கருஞ்சிவப்பு இழையோடும். ஆளி விதைஆளி விதை ஈட்டும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக வண்ணச் சாயங்களில் மெருகெண்ணெய்களிலும் (varnish) உலரவைக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.[1] விதைகளை உணவாகவும், விதைகளிலிருந்து குளிர்நிலையில் ஆட்டி எடுக்கப்பட்ட சணலெண்ணெய் (Linseed Oil) உணவுப் பொருள்களில் சேர்த்துகொள்ளலாம்.[2] இருவகை ஆளி விதைகள் உள்ளன; ஒன்று, மஞ்சள் மற்றொன்று காவி நிறம். காவி. ஆளி ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வந்தாலும் அது சாயம், கால்நடை தீவனம் மற்றும் சாயத்தில், ஓர் உள்ளடங்கு பொருளாகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒத்த ஊட்டச் சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகவும் திகழ்கின்றன. இதற்கு விதிவிலக்கு, சாலின்(solin) என்று அழைக்கப்படும் மஞ்சள் ஆளி; இதில் ஒமெகா-3 குறைவு, முற்றிலும் வேறுபட்ட எண்ணெயின் உயிரியல் கட்டமைப்பு உருவரை படிமம் (organic structural profile) கொண்டது. ![]() மீன் உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் ஒமேகா-3 கொழுப்புச் சத்தைப் பெறுவதற்கு ஆளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையின் மாவுடன் 3 தேக்கரண்டி நீர் சேர்த்தால், அது கேக் மற்றும் ரொட்டி சுடுவதற்கு, முட்டைக்கு பதிலான இறுகு பொருளாகும். ஆளிவிதையின் எண்ணெய், பால் சுரப்பதைக் கூட்டும் பொருளாகப் பரிந்துரைக்கப்படுகின்றது (galactagogue). இதய நோய்க்கு காரணமான கொலஸ்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதோடு இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் பேண ஒமேகா-3 உதவுகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia