இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்
இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (William III, டச்சு: Willem III, 4 நவம்பர் 1650 – 8 மார்ச் 1702) என்பவர் பிறப்பிலேயே ஆரஞ்சு இளவரசனாகப் பிறந்தவரும் 1672 ஆம் ஆண்டிலிருந்து இடச்சுக் குடியரசின் ஒல்லாந்து, சீலாந்து, யுச்சிரெச்ட், கெல்டர்லாந்து, ஒவர்ஜ்ஜிசெல் ஆகிய பிரதேசங்களின் ஆட்சியாளராகவும் 1689 ஆம் ஆண்டிலிருந்து இறப்புவரை இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றின் மன்னனாகவும் இருந்தவராவார். இசுக்கொட்லாந்தின் மன்னாக இவர் இரண்டாம் வில்லியம் என அறியப்படுகின்றார்.[1] முறைசாரா வண்ணமாகவும் அன்போடும் இம்மன்னன் வட அயர்லாந்து மக்களாலும் இசுக்கொட்லாந்து மக்களாலும் பில்லி மன்னன் என அழைக்கப்பட்டார்.[2] இம்மன்னையும் இவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டே 1688 ஆம் ஆண்டில் மாண்புமிகு புரட்சி மேற்கொள்ளப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia