இதயப்புறப்பை நீர்மம்இதயப்புறப்பை நீர்மம் அல்லது பெரிகார்டியல் திரவம் (Pericardial fluid) என்பது இதய அடுக்கு மூலம் பெரிகார்டியல் குழிக்குள் சுரக்கும் சீரஸ் திரவமாகும். பெர்கார்டியத்தில் இரண்டு அடுக்குகள் உள்ளன. நாரிழை போன்ற வெளிப்புற அடுக்கு மற்றும் உள்புற சீரஸ் அடுக்கு ஆகியவை. இந்த சீரஸ் அடுக்கில் இரண்டு சவ்வுகள் உள்ளன. இந்த பெரிகார்டியல் திரவமானது மூளையின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தை ஒத்திருக்கிறது, இது உறுப்புகளின் சில இயக்கம் குணப்படுத்தவும் அனுமதிக்கவும் உதவுகிறது.[1] செயல்பாடுகள்பெரிகார்டியல் திரவமானது எபிகார்டியல் மேற்பரப்பை உயவூட்டுவதன் மூலம் பெரிகார்டியத்திற்குள் உராய்வைக் குறைக்கிறது.[2] பெரிகார்டியல் நீர்மத் தேக்கம்பெரிகார்டியல் நீர்மத் தேக்கம் என்பது மிகையான அளவில் பெரிகார்டியல் திரவம் தேங்கி இருப்பதாகும். மின் ஒலி இதய வரைவுப் படம் மூலமாக இவ்வாறான நீர்மத்தேக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.[3] சிறிய அளவிலான பெரிகார்டியல் நீர்மத் தேக்கம் அபாயத்தை உருவாக்குவனவாகக் கருதப்படத் தேவையில்லை. இவ்வாறான நீர்மத்தேக்கம் எச்.ஐ.வி தீநுண்மி மூலம் ஏற்படுத்தப்பட்ட தொற்றின் காரணமாக ஏற்படலாம் அல்லது இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்டதாக இருக்கலாம். பெரிய அளவிலான அல்லது திடீரென சேகரமாகும் நீர்மத் தேக்கமானது இதய அமுக்கத்தை உருவாக்கி வாழ்வை அச்சுறுத்தும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்கலாம். இந்தச் சூழல் இதயத்தினை வென்ட்ரிக்கிள்கள் சரியாக நிரப்பும் பணியைத் தடுப்பதாக அமைந்து விடலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia