இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு விசயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, இந்திய உச்ச நீதிமன்றம், ஒருவரின் இருப்பை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இச்சட்டப் பிரிவு 142 என்பது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.[1] சட்டப்பிரிவு 142, சில சமயங்களில் சட்டம் தீர்வை வழங்காத நிலையில், வாதி, பிரதிவாதிகளுக்கு இடையே "முழுமையான நீதியை" வழங்க, உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. அந்தச் சூழ்நிலைகளில், வழக்கின் உண்மைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையில், ஒரு சர்ச்சையை அமைதிப்படுத்த நீதிமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். பிரிவு 142 க்குப் பின்னால் உள்ள சிறப்புகள்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு, சட்டத்திற்குப் புறம்பாக அல்லது அநீதியை அனுபவித்த மனுதாரர்களுக்கு முழுமையான நீதியை வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சிறப்பு மற்றும் அசாதாரண அதிகாரத்தை வழங்குகிறது.[2] சட்டப் பிரிவு 142 வது பிரிவின் அவசியத்தை அரசியலமைப்பு சபை ஏன் கருதியது
சட்டப் பிரிவு 142 வது பிரிவை பயன்படுத்திய முக்கிய நிகழ்வுகள்இச்சட்டப் பிரிவின் கீழ், இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 18 மே 2022 அன்று நிரந்தரமாக சிறை தண்டனையிலிருந்து விடுதலை செய்தது.[3][4] பின்னணிஇராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 9 அக்டோபர் 2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. சிறையில் உள்ள இராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 6 செப்டம்பர் 2018 அன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார். இதை சுட்டிக்காட்டியே அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 18 மே 2022 அன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia