பேரறிவாளன்
பேரறிவாளன் (A. G. Perarivalan; பிறப்பு: 30 சூலை 1971) என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டையைச் சேர்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் 1991 சூன் 11 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 9 இல் நிறைவேற்றப்படவிருந்து,[4] பின்போடப்பட்டது. தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு தீர்ப்பு 2014 பிப்ரவரி 18 அன்று வழங்கப்பட்டது. பின்னர் 2022 மே 18 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.[5] முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.[6] நூல்கள்கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்க்கையை விவரித்து "An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)" என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் இதன் இந்தி மொழிபெயர்ப்பையும் 2011 ஆகத்து 23 அன்று இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ. பி. பரதன் தில்லியில் வெளியிட்டார்.[7] தங்கப் பதக்கம்பேரறிவாளன் சிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.[8] பிணையில் விடுவிக்கப்படல்இராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனுக்கு 2022 மார்ச் 9 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. மாகாத்மா காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கோட்சேவுக்கு நீதிமன்றம் விடுதலை செய்ததை சுட்டிக்காட்டிய பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.[9] விடுதலைராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து 161வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் 2018 செப்டம்பர் 6 இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் படி, அப்போதைய எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுப்பதில் கால தாமதம் செய்தார். இக்காலதாமதத்தை சுட்டிக்காட்டி அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி. ஆர். கவாய், ஏ. எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு 2022 மே 18 அன்று தீர்ப்பு வழங்கியது.[10][11][12] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia