இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. வரையறைஇச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை:
இதன்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்கள் தேவை:
தண்டனைலஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஊழல் ஆணையம்ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம் என்ற இணைய தளத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia