நடுவண் விழிப்புணர்வு ஆணையம்


நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission, CVC) அரசாங்க ஊழலுக்கு தீர்வுகாண 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயரிய இந்திய அரசுத்துறை அமைப்பாகும். நடுவண் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும் நடுவண் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளில் விழிப்புணர்வு அலுவலக்கத்தை திட்டமிட,செயல்படுத்த மற்றும் மீளாய்வு செய்ய உதவிடவும் தன்னிச்சையான, எந்தவொரு அதிகார இடையூறுமில்லாத அமைப்பாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

நடுவண் அரசுத்துறைகளில் விழிப்புணர்வு தொடர்பான வழிகாட்டலுக்கான கே. சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்பிற்கான குழு பரிந்துரைகளின் பேரில் இது பெப்ரவரி, 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் தலைமை விழிப்புணர்வு ஆணையராக நிட்டூர் சீனிவாச ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பு ஓர் புலனாய்வு அமைப்பல்ல. வேண்டிய நேரங்களில் நடுவண் புலனாய்வுச் செயலகம் அல்லது துறைசார் தலைமை விழிப்புணர்வு அதிகாரிகளின் துணையை நாடுகிறார். அரசுத்துறை குடிமுறைப் பொறியியல் வேலைகளை ஆய்வு செய்ய மட்டும் இவ்வாணையத்தின் கீழாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியாற்றுகிறார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. M.P. Jain on Administrative Law, Tripathi(1986)

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya