இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
ஓர் இனத்தின் மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னும் அவ்வினத்தின் நீண்டகால வரலாறு அடங்கியிருக்கும். அப்படித் தமிழரின் வரலாற்றைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள பல சொற்களை, சமற்கிருதச் சொற்கள் எனத் தற்காலத்தில் பலர் பயன்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் உள்ள சொற்கள் காரணப்பெயர்கள் என்பதால், ஒன்றைக் குறிக்கப் பல சொற்களை உருவாக்க முடியும். இச்சிறப்பு தமிழ் மொழிக்கு இருப்பதனால், சமற்கிருதச் சொற்கள் என ஒதுக்கப்பட்ட பல சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கம் செய்யப்பட்டுத் தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி உருவாக்கப்பட்டபொழுது,
பலர், தமிழ்மொழியில் உள்ள ஒரு சொல், சமற்கிருத மொழியிலும் இருந்தால் அல்லது அச்சொல்லில் கிரந்தவெழுத்து இருந்தால், அச்சொல்லின் வேர்ச்சொல், பொருள், இலக்கணம், இலக்கிய வழக்கு, பலதரப்பட்ட மக்களின் பேச்சு வழக்கு, வரலாறு முதலியவற்றை ஆராய்ந்து தமிழ்ச்சொல்லா, சமற்கிருதச் சொல்லா என வகைப்படுத்தியப்பின்பு புதிய சொற்களை உருவாக்கினர்.
சிலர், தமிழ்மொழியில் உள்ள ஒரு சொல், சமற்கிருத மொழியிலும் இருந்தால் அல்லது அச்சொல்லில் கிரந்தவெழுத்து இருந்தால் அது சமற்கிருத மொழிச் சொல், தமிழ்மொழிச் சொல்லல்ல எனுமொரு தவறான கண்ணோட்டத்துடன் பல சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்கள் உருவாக்கினர். அவர்கள் செயலின் அடிப்படை நோக்கம் சரியானதாக இருந்தாலும் கண்ணோட்டம் தவறாக இருந்தது. இத்தவறான கண்ணோட்டத்தினை பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலிய தமிழறிஞர்கள் தங்கள் சொல்லாய்வுகளில் குறிப்பிடுகின்றனர்.
சமற்கிருதச் சொற்கள் என ஒதுக்கப்பட்ட சொற்களுள் பல தமிழ் மொழியிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளில் சமற்கிருத மொழிக்குச் சென்றவை. அப்படிச் சென்ற சொற்கள் பல காலப்போக்கில் பேச்சுவழக்கில் பல்வேறு திரிபுகளுடன் பிறமொழிகளில் வழங்கப்படுகின்றன. அச்சொற்களின் தொகுப்புப் பட்டியல்.
பிறமொழிச் சொற்கள் எனத் தவறாக வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள்
தமிழ்ச்சொல்
திரிந்த வழக்கு
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
வயம்/வயது/வயசு
வயசு
சமஸ்கிருதம்
அகவை, வயம் - வல்லமை, ஈர்ப்புத் தன்மை, வசீகரம்
மனம்/மனது/மனசு
மனசு
சமஸ்கிருதம்
மனம் - நிலைபெறும் தன்மை கொண்ட ஒன்று.
கோடி
கோடி
சமஸ்கிருதம்
வார்த்தை
வார்த்தை
சமஸ்கிருதம்
சொல்- வாயிருந்து வருகின்ற ஆருதை
அருத்தம்
அர்த்த
சமஸ்கிருதம்
பொருள். பிங்கல நிகண்டு - பொன்(பொருள்). சூடாமணி நிகண்டு - சொற்பொருள்.
வாக்கியம்
வாக்கியா
சமஸ்கிருதம்
வாக்கியம்(வாக்கு+இயம்), சொற்றொடர்
பதி
பதி
சமஸ்கிருதம்
இடம், தலைவன்
அதி
அதி
சமஸ்கிருதம்
ஆதியிலிருந்து அதிகரிக்கும் செயல் அதி என்றும் மீதியிலிருந்து குறைக்கும் செயல் மிதி என்றும் வழங்கப்படும்.
அதிகம்
அதிகா
சமஸ்கிருதம்
ஆதி
ஆதி
சமஸ்கிருதம்
ஆ+தல்(தொழிற்பெயர் விகுதி)=ஆதல்(ஆகுதல்) எனப் பொருள் படும் தொழிற்பெயர். ஆ+தி(தொழிற்பெயர் விகுதி)=ஆதி என்றால் முதன்மை என்று பொருள்.[1] முதல், தொடக்கம் - முன் நிற்கும் தன்மை
அகராதி
அகராதி
சமஸ்கிருதம்
அகரத்தை முதன்மையாகக் கொண்டது அகராதி(அகரம்+ஆதி). அகரமுதலி, அகரவரிசை
ஆலோசனை
ஆலோசனா
சமஸ்கிருதம்
ஆல்+ஓசனை=ஆலோசனை. ஆல்=ஆலமரம். ஓசனை=யோசனை, எண்ணம், சிந்தனை. அக்காலத்தில் சித்தர்கள் மலைகள் மேலுள்ள பாழிகளில் தங்கியிருப்பர், ஆலமரத்திற்கடியில் அமர்ந்திருப்பர். மக்கள் தங்கள் துன்பங்களுக்குத் தீர்வு(ஓசனை) வேண்டி அங்கு வந்து தங்களுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொள்வர். அப்படி சித்தர்கள் வழங்கும் தீர்வுக்கு ஆலோசனை(சித்தர்களின் எண்ணம்/சிந்தனை/தீர்வு) என்று பெயர். சித்தரான சிவனுக்கு ஆலமர்செல்வன் எனும் பெயரும் இதனடியே தோன்றியதேயாகும்.
ஆலயம்
ஆலயா
சமஸ்கிருதம்
இச்சொல்லை விளக்கவேண்டுமென்றால் ஆலோசனை எனும் சொல்லின் வேரினை விளக்க வேண்டும். ஆல்+ஓசனை=ஆலோசனை. ஆல்=ஆலமரம். ஓசனை=எண்ணம், சிந்தனை, யோசனை(ஓசனை எனும் சொல்லே உடம்படுமெய்யுடன் யோசனை என்றானது). அக்காலத்தில் சித்தர்கள் மலைகள் மேலுள்ள பாழிகளில் தங்கியிருப்பர், ஆலமரத்திற்கடியில் அமர்ந்திருப்பர். மக்கள் தங்கள் துன்பங்களுக்குத் தீர்வு(ஓசனை) வேண்டி அங்கு வந்து தங்களுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொள்வர். அப்படி சித்தர்கள் வழங்கும் தீர்வுக்கு ஆலோசனை(சித்தர்களின் எண்ணம்/சிந்தனை/தீர்வு) என்று பெயர். சித்தரான சிவனுக்கு ஆலமர்செல்வன் எனும் பெயரும் இதனடியே தோன்றியதேயாகும். இதனடியே தோன்றியதே ஆலயம்(ஆல்+அயம்) எனும் சொல்லும். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் விளக்கம்:முன்னாளில், ஆலமரத்தடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்கு தீர்ப்பிடமாகவும்(மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்குமிடம். இப்பண்பாட்டின் தொடர்ச்சி தான் தற்காலத்துப் பஞ்சாயத்து.), கல்வி பயிலிடமாகவும்(குருகுலக் கல்வி), விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே, பிற்காலத்தில் வணக்கத்திற்குரிய இடமாயிற்று.[2]
பாரதம்
பாரத்
சமஸ்கிருதம்
பார்+அதம்=பாரதம். பார்=உலகம். அதம்=தொகுதி.
சுத்தம்
சுத்தம்
சமஸ்கிருதம்
சுதம்(சுது+அம்)=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுது+இ=சுதி, சுதம்+திரம்=சுதந்திரம், சுதம்>சுத்தம்=தூய்மை எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல்.
முக்கியம்
முக்கியா
சமஸ்கிருதம்
முகு(வினைச்சொல்)=முன்னே வா. முகுதல்=முன்னே வருதல். முகுதல்>முக்குதல் என வல்லின ஒற்று மிகுந்தும் வரும். முகு+இயம்=முக்கு+இயம்=முக்கியம். முன் நின்று இயம்பும் தன்மை கொண்டது. முதன்மையானது. முகம்(முகு+அம்) எனும் சொல்லும் முகு என்ற சொல்லிலிருந்தே தோன்றியது. இதன்பொருள், முன்னே வரும் தன்மை கொண்டது. ஆ(ஆதல்)>ஆகு(ஆதல்>ஆகுதல்)>ஆகுதி>ஆதி என நிற்றலைப் போல, முகு>முகுதி>முதி என வரும். முதி என்றால் மூத்தது அல்லது முதன்மையானது எனப் பொருள்படும். முது, முத்து, முந்து, முதுமை, முந்துதல், முதியவர்(முதி+அவர்), மூத்தது, முதல்(முது+அல்), முதன்மை(முதல்+மை), முதிர், முதிர்ச்சி முதலிய சொற்களும் இதிலிருந்தே தோன்றியது.
முகம்
முஹா
சமஸ்கிருதம்
முகு(வினைச்சொல்)=முன்னே வா. முகுதல்=முன்னே வருதல். முகுதல்>முக்குதல் என வல்லின ஒற்று மிகுந்தும் வரும். முகு+இயம்=முக்கு+இயம்=முக்கியம். முன் நின்று இயம்பும் தன்மை கொண்டது. முதன்மையானது. முகம்(முகு+அம்) எனும் சொல்லும் முகு என்ற சொல்லிலிருந்தே தோன்றியது. இதன்பொருள், முன்னே வரும் தன்மை கொண்டது. ஆ(ஆதல்)>ஆகு(ஆதல்>ஆகுதல்)>ஆகுதி>ஆதி என நிற்றலைப் போல, முகு>முகுதி>முதி என வரும். முதி என்றால் மூத்தது அல்லது முதன்மையானது எனப் பொருள்படும். முது, முத்து, முந்து, முதுமை, முந்துதல், முதியவர்(முதி+அவர்), மூத்தது, முதல்(முது+அல்), முதன்மை(முதல்+மை), முதிர், முதிர்ச்சி முதலிய சொற்களும் இதிலிருந்தே தோன்றியது.
காவியம்
காவ்யா
சமஸ்கிருதம்
காப்பு+இயம்=காப்பியம். கா எனும் ஓரெழுத்துச் சொல் காப்பு எனும் சொல்லைக் குறிக்கும். ஆகையால், கா+இயம்=கா+வ்+இயம்=காவியம் எனவும் வரும். இதற்கு, காத்து இயம்புவது என்று பொருள்.[1]
இராத்திரி
ராத்
சமஸ்கிருதம்
இரு எனும் சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய முதலிய பொருள்களைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து தோன்றியவையே இருள்(இரு+உள்), இருட்டு(இருள்+டு), இருண்டு(இருள்+டு) மற்றும் இரவு(இரு+அவு) ஆகிய சொற்களாகும். நிலவு>நிலா, உலவு>உலா, வினவு>வினா, விழவு>விழா என்பதைப் போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும். உதாரணம், இரா, இராப்பொழுது, இராப்பகல், இராப்பாடி. இந்த இரா எனும் சொல், இரா+திரம்=இராத்திரம், இரா+திரி=இராத்திரி எனவும் வரும்.(சாத்திரம்>சாத்திரி,சாத்திரன், மந்திரம்>மந்திரி,மந்திரன், புத்திரம்>புத்திரி,புத்திரன், சுந்திரம்(>சுந்தரம்)>சுந்திரி,சுந்திரன் என்பதைப் போல) இராத்திரம் எனும் சொல்லிற்கு, இருண்ட திரம் கொண்டது என்று பொருள். இதனடியே தோன்றியதே இராத்திரி எனும் சொல்லாகும்.
இரகசியம்
ரகஸ்யா
சமஸ்கிருதம்
அகசு=பொழுது, பகல், இராப்பகல் கொண்டநாள். அகசு+இயம்=அகசியம். இதன்பொருள், ஆசியம், வேடிக்கை, பகிடிக்கூத்து, ஏளனம் என்பவையாகும். அதாவது, அனைவரையும் பார்க்கும் படி செய்வது அகசியம் எனப்படும். இரு எனும் சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய முதலிய பொருள்களைக் குறிக்கும். உதாரணம், இரா(இரு+ஆ), இருள்(இரு+உள்), இருட்டு(இருள்+டு), இருண்டு(இருள்+டு) மற்றும் இரவு(இரு+அவு) ஆகிய சொற்கள். இரு+அகசியம்=இரகசியம். இதன்பொருள், ஆரும் பார்க்காதபடி அல்லது ஆரும் பார்க்காதபொழுது, ஆர் கண்ணுக்கும் அல்லது ஆருக்கும் தெரியாத இருட்டான அல்லது மறைவான இடத்தில் இருக்கும் நேரத்தில் இயம்பப்படுவது(சொல்லப்படுவது) செய்யப்படுவது.
தமிழ்ச் சொற்களின் திரிபுகளின் வகைகள்
தோன்றல்
சொல்லின் முதலெழுத்துக்கு இடையில் ர்(R) சேர்த்து ஒலிப்பது
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
காமம்
காமம்(க்+ஆ+மம்)>க்ரமம்(க்+ர்+அ+மம்)>க்ராமம்
க்ராமம்
சமஸ்கிருதம்
சிற்றூர், க்ராமம்>கிராமம்(தமிழ்), (கமம் - உழவுத் தொழில் செய்யும் இடம்/ஊர், காமம் - ஒன்றாகக் கூடியிருக்கும் பண்பு, மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாழுமிடம், உதாரணம்: காமம் - கதிர்காமம்)
ஸ்ருதி>சுருதி(தமிழ்). முறைமையாக இருப்பது. சுதம்(சுது+அம்)=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுது+இ=சுதி, சுதம்+திரம்=சுதந்திரம், சுதம்>சுத்தம்=தூய்மை எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல்.
சொல்லின் முதலெழுத்தில் ஸ்(S) சேர்த்து ஒலிப்பது
குறிப்பு: மக்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சொற்களை உச்சரிக்கும் தன்மை(இயல்பு) பெறுவர். இதனால் தான், ஆங்கிலத்தில் மற்ற எழுத்துக்களைவிட S எனும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் அதிகம்.
சொல்லில் உள்ள சகர உயிர்மெய் ஜகர உயிர்மெய்யாகத் திரிதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
செயம்
செயம்>ஜெயம்>ஜெயா
ஜெயா
சமஸ்கிருதம்
சீவன்
சீவன்>ஜீவன்>ஜீவா
ஜீவா
சமஸ்கிருதம்
ஆசீவகம்
ஆசீவகம்>ஆசீவகா>ஆஜீவிகா
ஆஜீவிகா
சமஸ்கிருதம்
சீவகம்
சீவகம்>சீவகா>ஜீவகா
ஜீவகா
சமஸ்கிருதம்
சோதி
சோதி>ஜோதி
ஜோதி
சமஸ்கிருதம்
சோதியம்
சோதியம், சோதிடம்>ஜோஷ்யம், ஜோதிடம்>ஜோதிடா
ஜோதிடா
சமஸ்கிருதம்
பூசை
பூசை>பூஜை>பூஜா
பூஜா
சமஸ்கிருதம்
பூசு + ஐ அன்பான தொழிற்பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசு என்பது பூசுதல். பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும்.[3]
ஒப்பு நோக்குக :
பூசை = பூசு + ஐ
பண்டை = பண்டு + ஐ
சலம்
சலம்>ஜலம்
ஜலம்
சமஸ்கிருதம்
சல சல என ஒலி எழுப்புவது.
சாலம்
சாலம்>ஜாலம்
ஜாலம்
சமஸ்கிருதம்
சல்லிக்கட்டு
சல்லிக்கட்டு>ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
சமஸ்கிருதம்
மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு - முன்காலத்தில் மாடுகளின் கொம்புகளில் பணமுடிப்பை வைத்து அதை அடக்கச்சொல்வர். சல்லி (சில்லறை) கொண்ட அப்பணமுடிப்பை அடைய நடக்கும் பந்தயமே ஜல்லிக்கட்டு ஆனது.
சாதகம்
சாதகம்>ஜாதகம்
ஜாதகம்
சமஸ்கிருதம்
சீரணம்
சீரணம்>ஜீரணம்
ஜீரணம்
சமஸ்கிருதம்
தகர வல்லினம் மிகும் இடத்தில் தகரம் ஸகரமாகத் திரிதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
அகத்தியர்
அகத்தியர்>அகஸ்தியர்>அகஸ்தியா
அகஸ்தியா
சமஸ்கிருதம்
சூத்திரம்
சூத்திரம்(சூழ்+திரம்)>சூஸ்திரம்>சூஸ்த்ரா
சூத்ரா, சூஸ்த்ரா
சமஸ்கிருதம்
சாத்தன்
சாத்தன்>சாஸ்தன்>சாஸ்தா
சாஸ்தா
சமஸ்கிருதம்
சாத்திரம்
சாத்திரம்>சாஸ்திரம்>சாஸ்த்ரா
சாஸ்த்ரா
சமஸ்கிருதம்
பொத்தகம்
பொத்தகம்>புத்தகம்>புஸ்தகம்>புஸ்தக்
புஸ்தக்
சமஸ்கிருதம்
பொத்தகம், நூல்
நூல்
சொல்லில் உள்ள வல்லின மெய் (அ) உயிர்மெய் ஷகர மெய் (அ) உயிர்மெய்யாகத் திரிதல்
அசை>ஆசை(முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்) - அசைவது ஆசை, மின்>மீன் - மின்னுவது மீன்
விண்ணு
விண்>விண்ணு>விட்ணு>விஷ்ணு
விஷ்ணு
சமஸ்கிருதம்
வேட்டி
வேட்டி>வேஷ்டி
வேஷ்டி
சமஸ்கிருதம்
அட்டம்
அட்டம்>அஷ்டம்>அஷ்ட
அஷ்ட
சமஸ்கிருதம்
எட்டு
எட்டு
இட்டம்
இட்டம்>இஷ்டம்>இஷ்ட
இஷ்ட
சமஸ்கிருதம்
கட்டம்
கட்டம்>கஷ்டம்>கஷ்ட
கஷ்ட
சமஸ்கிருதம்
நட்டம்
நட்டம்>நஷ்டம்>நஷ்ட
நஷ்ட
சமஸ்கிருதம்
வருடம்
வருடம்>வருஷம்>வர்ஷா
வர்ஷா
சமஸ்கிருதம்
ஆண்டு, ஆட்டை. வருடை எனும் ஒரு வகை ஆட்டை அடையாளமாகக் கொண்ட மேழ மாதத்தை முதன்மையாகக் கொண்டதால் வருடம் என்றழைக்கப்பட்டது.
பிற திரிதல் வகைகள்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
அமிழ்தம்
அமிழ்தம்>அமிர்தம்>அமிர்தா
அமிர்தா
சமஸ்கிருதம்
எருமையூர்
எருமையூர்>மையூர்>மைசூர்
மைசூர்
காளிக்கோட்டம்
காளிக்கோட்டம்>கல்கத்தா>கொல்கத்தா
கல்கத்தா
திருவாமையூர்
திருவாமையூர்(திரு+ஆமையூர்)>திருவான்மியூர்
திருவான்மியூர்
நேயம்
நேயம்(நேய்+அம்)>நேசம்>நேஷம்
நேஷம்
சமஸ்கிருதம்
உராய்வு இல்லாமல் இருக்கும் தன்மை. நெய்>நேய்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்). நெய்யின் தன்மை கொண்டது நேய்(நேயம்).
கற்பனை
கற்பனை>கற்பனா>கல்பனா
கல்பனா
சமஸ்கிருதம்
பகவன்
பகவன்>பகவான்
பகவான்
சமஸ்கிருதம்
பகு+அவன்(அவு+அன், ஆண்பால் விகுதி)=பகவன்(ஒப்புநோக்குக:உழவன், மாணவன், கணவன், ஆதவன், முதலிய சொற்களும் இதேபோல் தான் உருவாகின). அதாவது, உழவுத் தொழிலை செய்பவன் உழவன் போல பகவுத் தொழிலைச் செய்பவன் பகவன். மற்றொரு கோணத்தில் பார்த்தால், அனைத்தையும் பகுத்தறிந்தவன் என்பது பொருள்(தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதுதான்).
சுதந்திரம்
சுதந்திரம்>ஸ்வதந்த்ரா
ஸ்வதந்த்ரா
சமஸ்கிருதம்
விடுதலை. சுதம்(சுது+அம்)=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுது+இ=சுதி, சுதம்+திரம்=சுதந்திரம், சுதம்>சுத்தம்=தூய்மை எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல்.
மறைதல்
சொல்லின் முதலில் உள்ள அகரம் மறைதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
அரிசி
அரிசி>ரிசி>ரைஸ்
ரைஸ்(Rice)
ஆங்கிலம்
அரத்தம்
அரத்தம்>ரத்தம்
ரத்தம்
சமஸ்கிருதம்
ரத்தம்>இரத்தம்(தமிழ்), குருதி
அரம்பம்
அரம்பம்>ரம்பம்
ரம்பம்
சமஸ்கிருதம்
ரம்பம்>இரம்பம்(தமிழ்)
ஐந்து
ஐந்து(அஇந்து)>இந்து>ஸிந்து(ஸ்+இந்து)
ஸிந்து
சமஸ்கிருதம்
ஐந்து நதி>இந்து நதி, ஐந்து நதிகள் கொண்டது
இந்திரன்
இந்திரன்>இந்த்ரா
இந்த்ரா
சமஸ்கிருதம்
ஐந்திரன்(அஇந்திரன்)>இந்திரன்
அரணவம்
அரணவம்>ரணவம்>ராணுவம்
ராணுவம்
சமஸ்கிருதம்
ராணுவம்>இராணுவம்(தமிழ்)
அரசன்
அரசன்>ரசன்>ரசா(விகுதி நீங்கல்)>ரஜா>ராஜா>ராஜ்
ராஜ்
சமஸ்கிருதம்
ராஜ்>ராஜா>இராசா, இராசன்(தமிழ்)
அரங்கம்
அரங்கம்>ரங்கம்>ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்
சமஸ்கிருதம்
திருவரங்கம்(திரு+அரங்கம்)
சொல்லின் முதலில் உள்ள இகரம் மறைதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
இலக்கம்
இலக்கம்>லக்கம்>லக்ஷ
லக்ஷ
சமஸ்கிருதம்
இலக்கம்
இலக்கம்>லக்கம்>லக்ஷ>லஷ்மி
லஷ்மி
சமஸ்கிருதம்
லஷ்மி>இலக்குமி(தமிழ்), திருமகள்
சொல்லின் முதலில் உள்ள உகரம் மறைதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
உலகம்
உலகம்>லகம்>லோகம்>லோகா
லோகா
சமஸ்கிருதம்
உருத்திரன்
உருத்திரன்>ருத்திரன்>ருத்ரன்>ருத்ரா
ருத்ரா
சமஸ்கிருதம்
உருவம்
உருவம்>ருவம்>ரூவம்>ரூபம்(வ->ப மாற்றம்)>ரூபா
ரூபா
சமஸ்கிருதம்
பூவுலகம்
பூவுலகம்(பூ+உலகம்)>பூலகம்>பூலோகம்
பூலோகம்
சமஸ்கிருதம்
சொல்லில் உள்ள யகர மெய் மறைதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
வேதம்
வேய்தம்(வேது+அம்)>வேதம்>வேதா
வேதா
சமஸ்கிருதம்
வேதா>வேதம்(தமிழ்), மறை. வேய்தல், வேதல் என மருவியது.[1] வேய் - உயரமாக வளரும் ஒரு வகை மூங்கில்(பெ.சொ.), மறைக்கும் செயல்(வி.சொ.). வேய்து(வேய்தல்) - கோவை பேச்சு வழக்கில் கூரை வேய்வது எனக் கூறுவர். இதன் பொருள் மறைப்பது. செய்>செய்து>செய்தல் என்பதைப் போல வேய்>வேய்து>வேய்தல் என்றானது. வேதம்(வேய்து+அம்)>வேதம் - ஒன்றை மறைத்து வைத்திருக்கும் பண்பைக் கொண்டது. இதனடியே தோன்றியது தான் வேந்தன் எனும் சொல்லும் கூட. வேந்து+அன்=வேந்தன். மக்களை முன்னின்று காப்பவன் எனப் பொருள்படும்.
சொல்லின் கடையில் உள்ள விகுதி நீங்கி அகரம் (அ) ஆகாரம் சேருதல்
தமிழ்ச்சொல்
திரிந்த விதம்
திரிந்த சொல்
சென்ற மொழி
தமிழ் மொழிப்பொருள்
சென்ற மொழியில் பொருள்
வேதம்
வேதம்(வேது+அம்)>வேதம்>வேதா
வேதா
சமஸ்கிருதம்
வேதா>வேதம்(தமிழ்), மறை. வேய்தல், வேதல் என மருவியது.[1] வேய் - உயரமாக வளரும் ஒரு வகை மூங்கில்(பெ.சொ.), மறைக்கும் செயல்(வி.சொ.). வேய்து(வேய்தல்) - கோவை பேச்சு வழக்கில் கூரை வேய்வது எனக் கூறுவர். இதன் பொருள் மறைப்பது. செய்>செய்து>செய்தல் என்பதைப் போல வேய்>வேய்து>வேய்தல் என்றானது. வேதம்(வேது+அம்)>வேதம் - ஒன்றை மறைத்து வைத்திருக்கும் பண்பைக் கொண்டது. இதனடியே தோன்றியது தான் வேந்தன் எனும் சொல்லும் கூட. வேந்து+அன்=வேந்தன். மக்களை முன்னின்று காப்பவன் எனப் பொருள்படும்.
ஈசன்
ஈசன்>ஈசா
ஈசா
சமஸ்கிருதம்
வேதா>வேதம்(தமிழ்), மறை
சூத்திரம்
சூத்திரம்(சூழ்+திரம்)>சூத்திரா>சூத்ரா
சூத்ரா
சமஸ்கிருதம்
மந்திரம்
மந்திரம்(மன்+திரம்)>மந்திரா>மந்த்ரா
மந்த்ரா
சமஸ்கிருதம்
மாயம்
மாயம்(மாய்+அம்)>மாயா
மாயா
சமஸ்கிருதம்
கலை
கலை(கல்+ஐ)>கலா
கலா
சமஸ்கிருதம்
சித்தம்
சித்தம்>சித்தா
சித்தா
சமஸ்கிருதம்
கோத்திரம்
கோத்திரம்(கோ+திரம்)>கோத்திரா>கோத்ரா
கோத்ரா
சமஸ்கிருதம்
வைத்தியம்
வைத்தியம்(வைத்து+இயம்)>வைத்தியா>வைத்யா
வைத்யா
சமஸ்கிருதம்
நாதன்
நாதன்>நாதா
நாதா
சமஸ்கிருதம்
காண்டம்
காண்டம்>கண்டா
கண்டா
சமஸ்கிருதம்
தூரம்
தூரம்>தூர்
தூர்
சமஸ்கிருதம்
குலம்
குலம்>குலா
குலா
சமஸ்கிருதம்
அதிகாரம்
அதிகாரம்>அதிகாரா
அதிகாரா
சமஸ்கிருதம்
அகங்காரம்
அகங்காரம்>அகங்காரா
அகங்காரா
சமஸ்கிருதம்
ஆகாயம்
ஆகாயம்>ஆகாசம்>ஆகாஸம்>ஆகாஸ்>ஆகாஷ்
ஆகாஷ்
சமஸ்கிருதம்
ஞானம்
ஞானம்>ஞான்
ஞான்
சமஸ்கிருதம்
விஞ்ஞானம்
விஞ்ஞானம்(விண்+ஞானம்)>விஞ்ஞான்
விஞ்ஞான்
சமஸ்கிருதம்
விமானம்
விமானம்(வீ+மானம்)>விமானா
விமானா
சமஸ்கிருதம்
விமான்>விமானம்(தமிழ்), உயரத்தில்(வீ) நிலைபெறும் தன்மை கொண்டது(மானம்)