இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும். இதன்கீழ் பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவகாட்டி, போபால், இலக்னோ, சோனேபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகியவிடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன. பாட்டியாலாவிலுள்ள நேதாசி சுபாசு தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுநருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்திய விளையாட்டு ஆணையத்தின் வட்டார மையங்களும் கல்விநிறுவனங்களும்![]()
இவற்றைத் தவிர இமாச்சலப் பிரதேசத்தில் சிலரூ என்றவிடத்தில் உயர்ந்த உயரத்தில் பயிற்சி வழங்கும் மையம் உள்ளது. விளையாட்டரங்கங்கள்இந்த ஆணையத்திடம் தில்லியிலுள்ள கீழ்க்கண்ட ஐந்து விளையாட்டரங்கங்களைப் பராமரிக்கும், பயன்படுத்தும், மேம்படுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது:
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia