இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021
இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி , இங்கிலாந்து அணியுடன் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இந்த சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஜூன் 2021 இல் தொடங்க உள்ளது.[1] அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா , இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் என்று கூறினார்.[2][3] இந்திய அணி இறுதியாக 2014 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினர்.[4] பின்னணிமுதலில், இந்தச் சுற்றுப்பயணம் ஜூன் மற்றும் ஜூலை 2020 இல் நடைபெற திட்டமிடப்பட்டது.[5] இந்த சுற்றுப்பயணத்தில் நான்கு ஒருநாள் மற்றும் இரண்டு இருபது -20 போட்டிகளாக நடைபெற இருந்தன.[6] இருப்பினும், ஏப்ரல் 24, 2020 அன்று, கோவிட் தொற்றுநோய் காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் துடுப்பாட்டத்திற்குத் தடை விதித்ததனால்[7] இந்தச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.[8] மே 2020 இல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியத்தின் இயக்குநர் கிளேர் கானர், 2020 செப்டம்பரில் சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணியுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்கலாம் என்று பரிந்துரைத்தார்.[9][10] இருப்பினும், 2020 ஜூலை 20 ஆம் தேதி, இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கத்தால் இந்தியா சுற்றுப்பயணம் செய்யவில்லை .[11] இறுதியாக, 2021-ஆம் ஆண்டின் சூன், மற்றும் சூலை மாதங்களில் 1 பெண்கள் தேர்வுப் போட்டி , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 பெண்கள் இருபது20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றை இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia