இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை என்பது விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) எனவும் சுருக்கமாக விடுதலை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஓர் இந்திய பொதுவுடமைக் கட்சியாகும்.[3] பீகார், சார்கண்ட், உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், டெல்லி, கருநாடக மாநிலங்களில் இதன் இருப்பு உள்ளது. வரலாறு1973இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) மாதவன் முகர்ச்சி தலைமையிலும் சர்மா தலைமையிலும் இரு குழுக்களாக பிரிந்தது. வினோத் மிசுரா ஆரம்பத்தில் முகர்ச்சி குழுவில் இருந்தார், 1973 செப்டம்பரில் பர்தமான் பகுதி குழுவோடு இவர் முகர்ச்சி குழுவை விட்டு பிரிந்தார். பிரிந்து வந்ததை அடுத்து சர்மா குழுவுடன் தொடர்பு ஏற்படுத்த முயன்றார், பர்தமான் குழு பின்னாளில் அதை விரும்பாததால் சர்மா குழுவுடன் அரசியலில் பயணப்படும் எண்ணத்தை கைவிட்டார். பீகாரின் சமவெளிகளில் ஆயத போராட்டம் நடத்தும் சுபத்திரா மிசுரா (சாகூர்) என்பவருடன் 1974இல் தொடர்பு ஏற்பட்டது. சாரு மசூம்தாரின் இரண்டாவது நினைவு தினமான 1974 யூலை 28 அன்று உருவான புதிய கட்சியின் மத்திய குழுவில் சாகூர் பொதுச்செயலாளராகவும் மிசுராவும் சுதேசு பட்டாச்சாரியாவும் (இரகு) உறுப்பினர்களாகவும் ஆனார்கள். இந்தக் கட்சி லின்-பியோவின் எதிர் குழு என அறியப்பட்டது. மாதவன் முகர்ச்சி குழு லின்னின் ஆதரவு குழு என அறியப்பட்டது. லின்-பியோவின் எதிர் குழுவே பின்னாளில் விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) ஆனது. மிசுரா இப்புதிய கட்சியின் செயலாளராக மேற்கு வங்காளத்தில் செயல்பட்டார். மிசுராவின் தலைமையின் கீழ் புதிய கரந்தடிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. லால் சேனாவின் நடவடிக்கையால் 1975 நவம்பர் சாகூர் கொல்லப்பட்டார். சீரமைக்கப்பட்ட மத்திய குழுவுக்கு மிசுரா புதிய பொதுச் செயலாளர் ஆனார், ஐந்து பேர் உறுப்பினர்கள் ஆனார்கள். மிசுரா கட்சியின் மாநாட்டை கயா மாவட்டத்தின் ஊரகப்பகுதியில் 1976 பிப்ரவரியில் நடத்தினார். மாநாட்டில் போட்டியின்றி மிசுரா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கட்டார்.| சாரு மசூம்தாரின் இரண்டாவது நினைவு தினமான 1974 யூலை 28 அன்று உருவான புதிய கட்சியின் மத்திய குழுவில் சாகூர் பொதுச்செயலாளராகவும் மிசுராவும் சுதேசு பட்டாச்சாரியாவும் (இரகு) உறுப்பினர்களாகவும் ஆனார்கள். இந்தக் கட்சி லின்-பியோவின் எதிர் குழு என அறியப்பட்டது. மாதவன் முகர்ச்சி குழு லின்னின் ஆதரவு குழு என அறியப்பட்டது. லின்-பியோவின் எதிர் குழுவே பின்னாளில் விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) ஆனது. மிசுரா இப்புதிய கட்சியின் செயலாளராக மேற்கு வங்காளத்தில் செயல்பட்டார். மிசுராவின் தலைமையின் கீழ் புதிய கரந்தடிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மறுசீரமைப்புஇக்கட்சியின் அரசியல் கட்டமைப்பை உருவாக்கியவர் மிசுரா. 1976இல் ஆயுத போராட்டத்தோடு காங்கிரசுக்கு எதிரான சனநாயக முன்னனி இயக்கத்தை நடத்த கட்சி முடிவெடுத்தது. 1977இல் இந்த கொள்கை மேம்படுத்தப்பட்டது. கட்சியின் அறிவுசார் குழுக்களும் கொள்கை பள்ளிகளும் மத்தியில் இருந்து வட்டாரங்களுக்கு மாற்றப்பட்டது. இந்திய மக்கள் முன்னனி1980இல் இக்கட்சி தன் கொள்கைக்கேற்ப கட்சிசார்பற்ற திரளான மக்கள் இயக்கத்தை உருவாக்க முனைந்தது. 1982இல் இந்திய மக்கள் முன்னனி உருவாக்கப்பட்டது இதன் தலைவராக நாகபூசன் பட்நாயக் இருந்தார். முன்னனி உருவாக்கப்பட்டாலும் திரை மறைவில் கட்சி மற்ற சனநாயக நாட்டுப்பற்றுடைய இயங்களுடன் மிசுராவின் வழிகாட்டல் படி தொடர்பை ஏற்படுத்தியது. மிசுரா தாய் கட்சியின் கொள்கைகளை மீறினாலும் சாரு மசூம்தாரின் மரபுவழி எச்சத்தை போற்ற தவறவில்லை. மாநில தேர்தல்கள்பீகார்2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பொதுவுடமைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் முன்றாவது அணி உருவாக்கி போட்டியிட்டது, அந்ந தேர்தலில் 1.5% விழுக்காடு ஓட்டுகளை பெற்றது. 2020 தேர்தலில் மகாகாத்பந்தன் என்ற பெருங்கூட்டணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது மேலும் 3.16% விழுக்காடு ஓட்டுகளாக அதிகரித்துள்ளது. [4] வரலாறுமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia