இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India ) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் , இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் , மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகும்.
தேர்தல் ஆணையர்கள்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பர். அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் 65 வயது நிரம்பும் வரை அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்[ 6]
வரிசை எண்
தேர்தல் ஆணையர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899)
மார்ச் 21 , 1950
டிசம்பர் 19 , 1958
2
கே.வி.கே. சுந்தரம்
டிசம்பர் 20 , 1958
செப்டம்பர் 30 , 1967
3
எஸ். பி. சென் வர்மா
அக்டோபர் 1 , 1967
செப்டம்பர் 30 , 1972
4
நாகேந்திர சிங்
அக்டோபர் 1 , 1972
பெப்ரவரி 6 , 1973
5
தி. சுவாமிநாதன்
பெப்ரவரி 7 , 1973
ஜூன் 17 , 1977
6
எஸ். எல். சக்தர்
ஜூன் 18 , 1977
ஜூன் 17 , 1982
7
ஆர். கே. திரிவேதி
ஜூன் 18 , 1982
டிசம்பர் 31 , 1985
8
ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
ஜனவரி 1 , 1986
நவம்பர் 25 , 1990
9
வி. எஸ். ரமாதேவி
நவம்பர் 26 , 1990
டிசம்பர் 11 , 1990
10
டி. என். சேஷன்
டிசம்பர் 12 , 1990
டிசம்பர் 11 , 1996
11
எம். எஸ். கில்
டிசம்பர் 12 , 1996
ஜூன் 13 , 2001
12
ஜே. மை. லிங்டோ
ஜூன் 14 , 2001
பெப்ரவரி 7 , 2004
13
த. சு. கிருஷ்ணமூர்த்தி
பெப்ரவரி 8 , 2004
மே 15 , 2005
14
பி. டாண்டன்
மே 16 , 2005
ஜூன் 29 , 2006
15
என். கோபாலசுவாமி
ஜூன் 29 , 2006
ஏப்ரல் 20 , 2009
16
நவீன் சாவ்லா [ 7] [ 8]
ஏப்ரல் 20 , 2009
ஜூலை 29 , 2010
17
ச. யா. குரேசி
ஜூலை 30 , 2010
ஜூன் 6 , 2012
18
வீ. சு. சம்பத்
ஜூன் 11 , 2012
ஜனவரி 15 , 2015
19
அரிசங்கர் பிரம்மா
ஜனவரி 15 2015
ஏப்ரல் 18 2015
20
சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி
ஏப்ரல் 19 2015
சூலை 5 , 2017
21
அச்சல் குமார் ஜோதி
சூலை 6 , 2017
சனவரி 22 , 2018
22
ஓம் பிரகாஷ் ராவத்
சனவரி 23 , 2018
டிசம்பர் 1 , 2018
23
சுனில் அரோரா
டிசம்பர் 2 , 2018
ஏப்ரல் 12 , 2021
24
சுசில் சந்திரா
ஏப்ரல் 13 , 2021
மே 14, 2022
25
இராஜீவ் குமார்
மே 15 , 2022
பதவியில்
தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு
மாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.70 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.29 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்திய தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது.[ 9]
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
நிலையான ஆணையங்கள் தற்காலிக ஆணையங்கள்