இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் (Indira Gandhi National Tribal University) என்பது மத்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அனுப்பூர் மாவட்டத்தில் அமர்கந்தாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகச் சட்டம், 2007 எனும் இந்திய அரசாங்கத்தின் பாராளுமன்றச் சட்டம் மூலம் 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]இதன் இளநிலை படிப்புகளுக்கு மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 2022-ஆம் கல்வி ஆண்டிலிருந்து சேர்க்கை நடைபெறுகிறது.[2] வரலாறு![]() இந்திரா காந்தி தேசிய பழங்குடிப் பல்கலைக்கழகச் சட்டம், 52, 2007ன் அடிப்படையில் 20 திசம்பர் 2007 அன்று இந்திய அரசிதழ், பகுதி II, பிரிவு I இல் வெளியிடப்பட்ட ஒரு சட்டம் இந்திய நாடாளுமன்ற சட்டம் மூலம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தினை அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், அர்ஜுன் சிங் 19 ஏப்ரல் 2008 அன்று அமர்கண்டக்கில் அடிக்கல் நாட்டித் துவக்கிவைத்தார். இந்திய அரசு சூலை 7, 2008, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான ஆணையை வெளியிட்டது. இந்த உத்தரவுக்கு இணங்க, பேராசிரியர். சந்திர தியோ சிங் 08.07.2008 அன்று துணைவேந்தராகப் பதவி ஏற்றார்.[3] இந்தப் பல்கலைக்கழகம், இந்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு மூலம் முழுமையாக நிதி பெறும் பல்கலைக்கழகமாகும். வளாகம்பல்கலைக்கழகத்தின் பிராந்திய வளாகம் மணிப்பூரில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பு நாடு முழுவதும் உள்ளதால், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படும் மையங்களைத் திறக்கும் திட்டம் உள்ளது. இதன்படி, மணிப்பூரில் பல்கலைக்கழகத்தின் முதல் பிராந்திய வளாகத்தை 09.09.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. அரசியல் அறிவியல் மற்றும் மனித உரிமை, சமூகவியல் மற்றும் சமூக மானுடவியல், சமூகப் பணி, பழங்குடியினர் ஆய்வுகள் மற்றும் உடற்கல்வி ஆகிய முதுகலைப் படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் இதன் மணிப்பூர் மண்டல கல்வி வளாகத்தில் வழங்குகிறது. அமைப்பு மற்றும் நிர்வாகம்ஆளுகை
கல்விப்புலங்கள்அறிவியல் புலம்
கணினியியல் புலம்
சமூக அறிவியல் புலம்
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் புலம்
வணிகவியல் மற்றும் மேலாண்மை புலம்
மனிதநேயம் மற்றும் மொழியியல் புலம்
பழங்குடியினர் ஆய்வு புலம் பழங்குடியினர் ஆய்வு புலம் கல்வித்துறை
புதிய ஆசிரியர்கள் மற்றும் துறைகள்
மருந்தியல் புலம் (மருந்தியல் பட்டயம், இளநிலை மருந்தியல், மருந்தியல் முனைவர் பட்டம்)
யோகா புலம் தொழில்நுட்ப தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சி புலம்
* முதுநிலை படிப்புகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia