இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்
இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum), தென் கென்சிங்டனின், கண்காட்சித் தெருவில் அமைந்துள்ள மூன்று பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. அறிவியல் அருங்காட்சியகமும், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகமும் ஏனைய இரண்டும் ஆகும். இதன் முன்புறம் குரோம்வெல் சாலையில் அமைந்துள்ளது. பண்பாடு, ஊடகம் மற்றும் விளையாட்டு வாரியத்தின் ஆதவுடன் இயங்கும் ஒரு பொது நிறுவனமாகும். இந்த அருங்காட்சியகம் உயிர் அறிவியல், புவி அறிவியல் என்பன தொடர்பான 70 மில்லியன் மாதிரிக் காட்சிப்பொருட்களைக் கொண்டுள்ளது. இவை தாவரவியல், பூச்சியியல், கனிமவியல், தொல்லுயிரியல், விலங்கியல் ஆகிய ஐந்து முக்கிய துறைகள் சார்ந்தவை. இந்த அருங்காட்சியகம், சிறப்பாக வகைப்பாட்டியல், அடையாளம் காணல், பாதுகாத்தல் போன்றவை தொடர்பான ஆய்வுகளுக்காக உலகப் புகழ் பெற்றது. டார்வினால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போன்ற, இங்குள்ள சேகரிப்புக்கள் பல மிகுந்த வரலாற்றுப் பெறுமானமும், அறிவியல் பெறுமானமும் கொண்டவை. இங் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொன்மாக்களின் எலும்புக் கூடுகளுக்காகவும் இக் கட்டிடத்தின் கட்டிடக்கலைச் சிறப்புக்காகவும் இந்த அரும்காட்சியகம் பெரிதும் பெயர் பெற்றது. குறிப்புகள்
வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia