விலங்கியல்
![]() விலங்கியல் (Zoology) என்பது உயிரியலின் ஓர் பிரிவாகும். இது விலங்குகளை பற்றி அறியும் இயல். இதில் வாழும் அல்லது அழிவடைந்த விலங்குகளின் பரிணாமம், உயிரியல் வகைப்பாடு, நடத்தை, கருவியல், உயிரணுவியல்(செல்லியல்), மரபியல், மற்றும் கட்டமைப்பு போன்றவை ஆராயப்படுகின்றன. வரலாறுபுராதன வரலாறுபழங்காலத்தில் விலங்குகளை மனிதன் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதுபற்றி ஆராய தொடங்கியது தான் விலங்கியல் வரலாற்றிற்கான ஆரம்பமாகும்.
இடைப்பட்ட காலம்பிற்காலத்தில் ரோம-கிரேக்க காலத்திலேயே விலங்கியல் என்ற துறை தனித்து உருவாகியது. கிரேக்க தத்துவவியல் அறிஞர் அரிசுட்டாட்டில் விலங்கியலின் தந்தை எனப்படுகிறார். இவரே எளிய தாவர, விலங்கு வகைப்பாட்டியலின் முன்னோடியும் ஆவார். இத்துறை வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் இசுலாமிய மருத்துவர்களால் முன்னேற்றம் கண்டது.[1][2][3] ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் விலங்கியல் பற்றிய சிந்தனை புலனறிவாதத்தின் மேலான புதிய உயிரினங்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. 18-19ம் நூற்றாண்டுகளில் விலங்கியல் கற்றோர் ஈடுபடும் துறையாக மாறியது. ஒரு கல உயிரி முதல் பல கலங்களைக் கொண்ட உயிரிகள் வரை பல்வேறு அறிஞர்களால் பகுத்துணரப்பட்டன.[4][5] டார்வின் காலத்திலிருந்துபரிணாமவியலின் தந்தையான சார்லஸ் டார்வின், உடலியங்கியல் மற்றும் உருவவியல் ஆகியவற்றை பொதுவான உயிரியல் கோட்பாட்டுடன் ஒன்றிணைத்து அவற்றிற்கு புதிய விளக்கம் அளித்தார். இதன் விளைவாக அறிஞர்கள் விலங்குகளை மரபு வழி சார்ந்து வகைப்படுத்தவும், விலங்குகளின் வளர்ச்சியை பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், விலங்குகளுக்கிடையேயான மரபியல் தொடர்பு பற்றி அறியவும் முற்பட்டார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் தன்னியல்பு உருவாக்கம் (en:Spontaneous generation) என்ற கொள்கைக்குப் பதில் நோய்க் கிருமிக் கோட்பாடு என்பது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் பாரம்பரியம் என்பதன் செயல்பாடு பற்றி சரிவர புரியாமல் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிரிகோர் மெண்டல் மரபியலைப் பற்றிப் புதிதாக கண்டறிந்ததை கொண்டு மரபியல் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. ஆய்வுகட்டமைப்புஉயிரணுவே உயிர்களின் அமைப்பு மற்றும் செயலுக்கான அடிப்படை அலகாகும். உயிரணுக்களின் அமைப்பு, தொழில் போன்றவற்றை அறிந்திருத்தல், ஏனைய அனைத்து வகையான உயிரியல் அறிவிற்கும் அவசியமாகும். உயிரணுவியல் என்பது உயிரணுக்களின் அமைப்பு, இயக்கம், தன்மை, சூழலுடனான இடைத்தாக்கம் போன்ற அனைத்து பண்புக்கூறுகளைப் பற்றி அறிய உதவும் அறிவியல் ஆகும். இது ஒரு கல உயிரிகளான அமீபா, பாக்டீரியா முதற்கொண்டு, பலகல உயிரிகளான மனிதன் உள்ளிட்ட விலங்குகளின் உயிரணு அமைப்புக்களை ஆராய்கிறது. மிகச் சிறிய தனிக்கல உயிரினங்களின் எளிய கலங்கள் தொடக்கம், பல்கல உயிரினங்களினது விசேடப்படுத்தப்பட்ட உயிரணுக்கள் வரை நுணுக்குக்காட்டியியல், மற்றும் மூலக்கூற்று உயிரியல் போன்ற அறிவியல் மூலம் ஆராயப்படுகின்றது. உயிரணுக்களுக்கிடையிலான வேறுபாட்டை ஆராய மூலக்கூற்று உயிரியல் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வகை அறிவியல் மூலம் அணுக்கள், உயிரணுக்கள், இழையம், போன்றவற்றை ஆராய்ந்தறிய முடிகின்றது. மேலும் உடற்கூற்றியல் என்பது விலங்குகளின் கட்புலனால் பார்த்தறியக் கூடிய, உடலுறுப்புகளையும், உறுப்புக்களின் தொகுப்பினால் உருவாகும் உடல் தொகுதிகளையும், அதன் அமைப்புகளையும் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவாகும்.[6] விலங்கு உடலியங்கியல்வாழும் உயிரினங்களான விலங்குகள், மற்றும் தாவரங்களின் உடலக் கட்டமைப்புகள், இயக்கம், செயற்பாடு, உயிர்வேதியியல் செயல்முறைகள் முதலியவை பற்றியும், அவை அனைத்தும் இணைந்து எவ்வாறு ஒரு உடலில் தொழிற்படுகின்றன என்பது பற்றியும் படிக்கும் அறிவியலே விலங்கு உடங்கியலாகும். "கட்டமைப்பிலிருந்து செயற்பாடு" என்பதை அறிவதே இந்த உடலியங்கியலில் முக்கிய நோக்கமாகும். இது தாவர உடலியங்கியல், விலங்கு உடலியங்கியல் என இரு கூறுகளைக் கொண்டிருப்பினும் எல்லாக் கலங்களின் உடலியங்கியலும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக மதுவம் போன்ற உயிரிகளின் உயிரணுக்களின் உடலியங்கியலை ஒத்ததாகவே, மனித உடலிலுள்ள உயிரணுக்களின் உடலியங்கியலும் அமைந்திருக்கின்றது. மனிதனின் உடலியக்கங்களைப் பற்றிய அறிவியல் மனித உடலியங்கியல் எனப்படும். மனிதரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இணைந்து செயலாற்றும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன:
பரிணாமவியல்பரிணாமவியல் என்பது வெவ்வேறு இனங்களின் தோற்றம், அவற்றின் மரபு வழிச் சந்ததி உருவாக்கம், தேவை, சூழலுக்கேற்ப அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் அறிவியலாகும். உயிரிகளின் படிவளர்ச்சிக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சிகள் வெவ்வேறு உயிரிகளுக்கிடையிலான தொடர்பைத் தெளிவாக்கின. பரிணாமவியல், ஓர் உயிரினத்தின் பண்புகளை மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது, காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் வாழ்வாதாரம், தன்னேர்ச்சியான நிகழ்வுகள், தேவை, சூழல் ஆகியனவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்குகின்றது. இதனை பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர். பாலூட்டியியல், பறவையியல், ஊர்வனவியல் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், அதன் அமைப்பொத்த இயல்புகளுக்குப் பரிணாமவியல் மூலம் விளக்கமளிக்க இயலும். இயற்கைத் தேர்வு, வாழ்க்கைப் போராட்டம், சர்வ வல்லமை முதலியன உயிரினங்கள் அழியாமல் பரிணமிக்க வைக்கும் படிவளர்ச்சி முறைகள் ஆகும். புதைபடிமவியல் மூலம் பரிணாம உயிரியல் ஓரளவுக்கு வளர்ச்சி முறையை எட்டியுள்ளது எனலாம். மரபியல், பரிணாமக் கோட்பாடு போன்ற துறைகளின் பல கேள்விகளுக்கும் புதைபடிமவியல் சான்றளிக்கிறது. 1980 களில், உயிரியல் வளர்ச்சி, பரிணாமவியலின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றது. இதன் பெரும்பங்கு விலங்கு மரபியல், உயிரியல் வளர்ச்சி முறை, மற்றும் உயிரியல் வகைப்பாடு ஆகிய அடிப்படைத் துறைகளைச் சாரும். வகைப்பாட்டியல்உயிரினங்களை இனம், பேரினம், குடும்பம், வரிசை, வகுப்பு, தொகுதி, அல்லது பிரிவு, திணை அல்லது இராச்சியம் என வகைப்படுத்தும் முறை விலங்கியலின் வகைப்பாடு எனப்படும். உயிரியல் வகைப்பாடு அறிவியல் வகைப்பாட்டின் ஒரு வடிவம் ஆகும். கரொலஸ் லின்னேயஸால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தற்போதைய வகைப்பாடு நவீன உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது. வகைப்பாட்டியலின் மாற்றங்கள், டார்வினின் கொள்கை நிலைத்தன்மை, மரபியல், டி. என். ஏ படிவரிசைகள் மூலம் புதுவடிவம் பெறுகின்றன. புதிய இனங்களின் கண்டுபிடிப்பு, அறிவியல் வளர்ச்சி, வகைப்பாட்டியலை இன்னமும் புதுப்பிக்கும். விலங்கின நடத்தையியல்ஆய்வகமல்லாது, இயற்கைச் சூழலில்[7] விலங்குகளின் நடத்தையைப் பற்றி அறிய உதவும் அறிவியல் விலங்கின நடத்தையியல்(எத்தாலஜி) எனப்படும். நடத்தையியல் வல்லுநர்கள், இயற்கைத்தேர்வு கோட்பாட்டின் அடிப்படையில் உயிரினங்களின் நடத்தைகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உணர சிரமமாக இருந்தது. ஆனாலும் நவீன நடத்தையியல் வல்லுநர் எனப் பொற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய "மனிதன் மற்றும் விலங்குகளின் உணர்ச்சிகள்" (The Expression of the Emotions in Man and Animals) என்ற புத்தகம் தற்கால வல்லுநர்களின் அனைத்து சிரமங்களையும் எளிதாக்கின. உயிர்ப்புவியியல் ஆய்வுகள், உயிரினங்களின் இடஞ்சார்ந்த பரவல்,[8] தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, காலநிலை மாற்றம், வலசை போதல், உயிரினப் பல்வகைமை மூலம் நடத்தையியலுக்கு உரமூட்டுகின்றன. விலங்கியல் உட்பிரிவுகள்மேலும் அறிய விலங்கியல் சில சிறப்பு உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளன, அவை,
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்கள்ஊடகங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia