இரண்டாம் கிருட்டிணராச உடையார்
மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಇಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್, - 25 ஏப்ரல் 1766) அல்லது இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்.[2] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். வாழ்க்கைஇவர் 8.அக்டோபர் 1731 இல் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணி அவரு (முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, சிக்க கிருட்டிண தேவராச உடையார் என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாயின் கட்டுப்பாட்டிலும், ஐதர் அலியின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார்.[3] ஐதர் அலியின் வளர்ச்சிஇம்மன்னர் காலத்தில் முதலமைச்சரான நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது ஐதர் அலி என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும், 50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்ஜியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். [4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia