இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர்
புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் (Francis II, Holy Roman Emperor, ஜெர்மன் மொழி: Franz II, Heiliger Römischer Kaiser, பெப்ரவரி 12, 1768 – மார்ச் 2, 1835) என்பவர் புனித ரோமப் பேரரசின் கடைசி மன்னர். இவன் 1792 ஆம் ஆண்டில் இருந்து 1806 வரை பதவியில் இருந்தார். ஆகஸ்ட் 6, 1806 இல் அவுஸ்டர்லித்ஸ் என்ற இடத்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியனுடன் இடம்பெற்ற போரில் பெரும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவியிழந்தார். 1804 ஆம் ஆண்டு இவர் ஆஸ்திரியப் பேரரசை உருவாக்கி ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் அதன் முதலாவது பேரரசன் ஆனார். 1835 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியாவின் பேரரசனாகப் பதவி வகித்து இரண்டு பேரரசுகளை ஆண்ட ஒரேயொரு மன்னன் பெயரைப் பெற்றான். அவுஸ்டர்லித்சில் தோல்வியடைந்தாலும் முதலாம் பிரான்சிஸ் தொடர்ந்து நெப்போலியனை எதிர்த்து போரிட்டு மேலும் பல தோல்விகளைச் சந்தித்தான். எனினும் பிரான்சிசின் மகள் ஆஸ்திரியாவின் மரீ லூயிஸ் முதலாம் நெப்போலியனை மார்ச் 10, 1810 இல் மணம் புரிந்து பிரான்சின் அரசியானாள்.[1][2][3] படிமங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia