இலங்கைத் துடுப்பாட்ட அணிமேற்கிந்தியத் தீவுகளில் 2018 சூன் மாதத்தில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டகளில் விளையாடியது.[1][2] 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடியது. அத்துடன் கென்சிங்டன் ஓவல் அரங்கத்தில் முதல் தடவையாக விளையாடியது.[3] கென்சிங்டன் ஓவலில் நடைபெறும் ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடப்பட்ட முதலாவது பகல்/இரவு தேர்வுத் துடுப்பாட்டமும் ஆகும்.[4][5] தேர்வு ஆட்டங்களுக்கு முன்னதாக இலங்கை அணி ஒரு மூன்று-நாள் போட்டியிலும் விளையாடியது.[6] தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[7]
2018 மே 19 இல், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வாரியம், மூன்று தேர்வு ஆட்டங்களுக்குப் பதிலாக, இரண்டு தேர்வு ஆட்டங்களும் இரண்டு ஒரு-நாள் போட்டிகளையும் விளையாட அனுமதி கோரியிருந்தது.[8] ஆனால், முதலாவது துடுப்பாட்டப் போட்டி இடம்பெறுவதற்கு முதல் நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே நடைபெறும் என உறுதிப்படுத்தியது.[9]
இரண்டாவது தேர்வுப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, புதிய பந்து கொண்டு ஆட நடுவர் எடுத்த முடிவை இலங்கை அணி எதிர்த்தது.[10][11]தினேஸ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைப்பட்டது.[12] பந்தை சேதப்படுத்தியதாக சந்திமல் மீது ஐசிசி குற்றம் சுமத்தியது.[13] இக்குற்றச்சாட்டுகளை சந்திமல் மறுத்தார்.[14] அடுத்த தேர்வுப் போட்டியில் விளையாட ஐசிசி சந்திமல்லுக்குத் தடை விதித்தது.[15] with Chandimal appealing against the decision.[16][17] மூன்றாவது தேர்வுப் போட்டியில் தலைமை தாங்க சுரங்க லக்மால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18][19]
சுற்றுப் பயணம் ஆரம்பிக்கும் நாள் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தனஞ்சய சுற்றுப் பயணத்தில் இருந்து விலகிக் கொண்டார்.[22] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டியில் கலந்து கொண்டார்.[23]
வெற்றி தோல்வியின்றி முடிவு டாரென் சாமி துடுப்பாட்ட அரங்கு, குரொசு தீவு நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்) ஆட்ட நாயகன்: சானன் கேப்ரியல் (மேஇ)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இரண்டாம் நாள் மழை காரணமாக 42.3 மட்டுமே விளையாடப்பட்டது.
கசுன் ராஜித்த, மகெல உடவத்தை (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
கேமர் ரோச் (மேஇ) தனது 150வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[24]
சானன் கேப்ரியல் (மேஇ) தனது 100வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[25][26]