உமிழ்நீர்ச் சுரப்பி
உமிழ்நீர்ச் சுரப்பிகள் (salivary glands) என்பது பாலூட்டிகளில் அமைந்த, உமிழ்நீரைச் சுரக்கும் புறச்சுரப்பு நாளங்கள் ஆகும். மாந்தனில் மூன்றிணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைதுள்ளன (கன்ன, கீழ்த்தாடை, கீழ்நாக்குச் சுரப்பிகள்) மேலும், பல சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகளும் உள்ளன.[1] உமிழ்நீர்ச் சுரப்புகளைக் கோழைச் சுரப்பிகள், சீரச் சுரப்பிகள், கலப்புச் சுரப்பிகள் எனவும் வகைபடுத்தலாம். சீரச் சுரப்புகளில் உருவாகும் முதன்மை நொதியாக ஆல்பா அமிலேசு எனும் தரசம் அல்லது மாப்பொருளைச் சிதைத்து மால்ட்டோசaகவும் குளூக்கோசாகவும் மாற்றுகிறது;[2] கோழைச் சுரப்பிகள் மியூசின் எனும் முதன்மைப் புரத்த்தைச் சுரக்கிறது. இது உயவுப் பொருளாகப் செயல்படுகிறது[1] மாந்தரில் ஒவ்வொரு நாளும் 0.5 முதல் 1.5 லிட்டர்கள் உமிழ்நீர் உருவாகிறது.[3] உமிழ்நீர்ச் சுரப்பு இணைபரிவு மண்டலத் தூண்டலால் உருவாகிறது; அசெட்டைல்கோலைன் செயல்முனைவான நரம்பியல் செலுத்தியாகும். இது நாளங்களில் உள்ள இணைபரிவு மண்டல ஏற்பிகளுடன் பிணைந்து உமிழ்நீர்ச் சுரப்பைக் கூட்டுகிறது.[3][4] கட்டமைப்பு![]() உமிழ்நீர்ச் சுரப்பிகள் கீழே தரப்படுகின்றன: கன்னச் சுரப்பிகள்மாந்தர்களில் கன்னச் சுரப்பிகள் இரு முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகள் தாடை எலும்புகளைச் சுற்றி போர்த்தியபடி அமைந்துள்ளன.[5] உமிழ்நீர்ச் சுரப்பிகளிலேயே பெரியனவாகிய இவை சுரக்கும் உமிழ்நீர் விழுங்கலுக்கும் mastication பணிக்கும் உதவுகிறது. இவை சுரக்கும் அமிலேசு நொதி மாப்பொருளைச் செரிக்க உதவுகிறது.[6] இது தயாலினைச் சுரக்கும் ஊனீர்வகை சுரப்பாகும்.[7] இது கன்னச் சுரப்பிகள் (சுட்டென்சன் குழல்) ஊடாக வாயறைக்குள் செல்கிறது. இந்தச் சுர்ப்பிகள் தாடையெலும்புக்கு பின்னால் அமைந்துள்ளது. கன்ன எலும்பின் முலைவடிவத் துருத்திக்கு முன்னால் உள்ளது. முக நரம்பு நரம்புக் கிளைகளை வெட்டிப் பார்க்க மருத்துவ இயலாக உதவுகிறது. அப்போது அதன் பல்வேறு இதழ்களும் வெளியே தெரியும். இல்லாவிட்டால், மாறாக மருத்துவ்வழி வெட்டலைப் பயன்படுத்தும்போது முகவிளக்க தசைகளின் வலிமையிழப்போ அல்லது செயலிழப்போ ஏற்படும்.[7] கீழ்த்தாடைச் சுரப்பிகள்கீழ்த்தாடைச் சுரப்பிகள் (முன்னர் மேல்தாடைச் சுரப்பிகள் எனப்பட்டவை) என்பவை கீழ்த்தாடயின் கீழே அமைந்த ஓரிணை முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகளாகும். இவை digastric தசைகளுக்கு மேலே அமைந்துள்ளது.[5] இச்சுரப்பு ஊனீரும் கோழையும் கலந்த கலவையாக அமைகிறது; இது கீழ்த்தாடைக் குழல் (வார்ட்டன் குழல்) ஊடாக வாயறைக்குள் நுழைகிறது.[6] Approximately 65-70% of saliva in the oral cavity is produced by the submandibular glands, இவை கன்னச் சுரப்பிகளை விட சிறியவை என்றாலும், வாயறையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏறத்தாழ 65-70% அளவுக்கு கீழ்த்தாடைச் சுரப்பிகளே சுரக்கின்றன.[6] இது கழுத்தில் மேலீடாக அமைந்துள்ளதால் இவற்றை எளிதாக வட்ட வடிவப் பந்தாக அமைதலை உணரலாம். இது ஆதாம் ஆப்பிளுக்கு (குரல்வளை புடைப்புக்கு) மேலே இருவிரல் தொலைவில் ஈரங்குல இடைவெளியில் முகவாய்க்குக் கீழே உள்ளன. கீழ்நாக்குச் சுரப்பிகள்கீழ்நாக்குச் சுரப்பிகள் நாக்கு அடியிலும்கீழ்த்தாடைச் சுரப்பிகளுக்கு முன்னாலும் அமைந்த ஓரிணை முதன்மை உமிழ்நீர்ச்சுரப்பிகள் ஆகும்.[5] இவற்றின் சுரப்பு பெரிதும் கோழையாகவே உள்ளது; என்றாலும், இது கலப்புச் சுரப்பியாக வகைபடுத்தப்பட்டுள்ளது.[7] மற்ற இரு முதன்மைச் சுரப்பிகளைப் போலல்லாமல், கீழ்நாக்குச் சுரப்பிகளின் குழல் அமைப்பு இடைமறிப்பு குழல்களாக அமையவில்லை; மேலும், இதில் வரிப்பள்ளங்கள்அமைவதில்லை எனவே, கீழ்நாக்குச் சுரப்பிகளின் 8-20 சுரப்புக் குழல்களில் (இரிவினசுக் குழல்களில்) இருந்து உமிழ்நீர் சுரக்கிறது.[7] Approximately 5% of saliva entering the oral cavity comes from these glands.[6] சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகள்வாயறைக்குள் மென்கோழைப்படலத்தில் 800 முதல் 1000 வரையிலான சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைந்துள்ளன[8] வான் எபுனர் சுரப்பிகள்நரம்பு இணைப்புநுண் உடற்கூற்றியல்குழல்நுனிகள்குழல்கள்மரபனும் புரதக் கோவையும்உருவாக்கம்அகவை முதிர்வில்அகவை முதிர்வு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்குகிறது:[9][10][10]
Iமேலும், இதோடு உமிழ்நீர் உட்கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன:
என்றாலும், ஒட்டுமொத்த உமிழ்நீர் சுரப்பளவு மாறுவதில்லை. பணிபொதுவாக உமிழ்நீர் சுரப்பு உடல்நலத்துக்கும் வாயறைக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அவை கீழே விவரிக்கப்படுகின்றன:
மருத்துவச் சிறப்புமருத்துவ ஓர்வுகள்/ஆய்வுகள்பிற விலங்குகளில்இச்சுரப்பிகளினுள்ளே பல நுண்ணறைகள் உள்ளன. குருதிக் குழாய்களும், நரம்பிழைகளும் இச்சுரப்பிகளுக்குள் சுரப்பித்திறப்பின் (hilum) வழியாக உட்புகுந்து கிளைகளாக நுண்ணறைகளுக்குள் படிப்படியாகச் செல்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia