எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்
தன்னாட்சி சமூகங்கள் (ஆங்கிலம்: autonomous community, எசுப்பானியம்: comunidad autónoma) 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் நோக்கோடு இந்தப் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன.[1][2][3] முழுமையான நாட்டிற்கு மட்டுமே இறையாண்மை இருப்பதால் (தேசிய அல்லது நடுவண் அரசு இயந்திரங்களால் செயற்படுத்தப்படுவதால்) இந்தச் சமூகங்களுக்கு இறையாண்மை இல்லை. அதாவது எசுப்பானியா ஓர் கூட்டாட்சி அல்ல; ஆட்சி மிகவும் பரவலாக்கப்பட்ட[4][5] ஒருமுக அரசு[1] ஆகும். சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளன.[1] எசுப்பானியாவில் மொத்தம் 17 தன்னாட்சி சமூகங்களும் 2 தன்னாட்சி நகரங்களும் உள்ளன; இவை கூட்டாக "தன்னாட்சிகள்" என அறியப்படுகின்றன. தன்னாட்சி சமூகங்கள் (அமைவிடம்)மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia