எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு
பிலிப்பு V (Philip V,எசுப்பானியம்: Felipe V, French: Philippe, இத்தாலியம்: Filippo; 19 திசம்பர் 1683 – 9 சூலை 1746) எசுப்பானியாவின் அரசராக இருந்தவர். நவம்பர் 1, 1700 முதல் சனவரி 15, 1724 வரையும் பின்னர் செப்டம்பர் 6, 1724 முதல் சூலை 9, 1746 வரையும் இரு பதவிக்காலங்களில் அரசராக இருந்தார். முதல்முறை தனது மகன் லூயிக்காக பதவி துறந்தார்; ஆனால் அதே ஆண்டு அவர் மரணமடைந்ததால் மீண்டும் அரசராகப் பதவி ஏற்றார்.[1][2][3] தாம் எசுப்பானியாவின் அரசராவதற்கு முன்பாக பிரான்சின் அரச குடும்பத்தில் முதன்மையான இடத்தில் இருந்தார். அரசர் பதினான்காம் லூயியின் பேரனாவார். அவரது தந்தை, லூயி, பெரும் கோமானுக்கு எசுப்பானியாவின் மன்னராவதற்கு முழுமையான மரபணுவழி உரிமை இருந்தது; ஆனால் அவரும் அவரது முதல் மகன் பர்கண்டி பிரபு, லூயியும் பிரான்சு அரியணை ஏற வாரிசுரிமைப் பெற்றிருந்ததால் எசுப்பானிய அரசர் இரண்டாம் சார்லசு பிலிப்பை தமது உயிலில் வாரிசாக அறிவித்தார். ஆனால் இவர் முடி சூடினால் பிரான்சும் எசுப்பானியாவும் இணைந்து ஒரே அரசரின் கீழாக வல்லரசு ஆகும் எனவும் ஐரோப்பிய அதிகார சமநிலை பாதிக்கப்படும் எனவும் மற்ற ஐரோப்பிய நாடுகள் இதைத் தடுக்க முயன்றன. பிலிப்பு அரசரானதும் அதனை எதிர்த்து இந்நாடுகள் 14-ஆண்டு எசுப்பானிய மரபுரிமைப் போர் நடந்தன; உத்ரெக்ட் உடன்பாடு மூலம் வருங்காலத்தில் பிரான்சும் எசுப்பானியாவும் இணையும் வாய்ப்பை தடுக்கும்வரை இப்போர் நடந்தது. பூர்பூன் அரசமரபிலிருந்து எசுப்பானியாவின் அரசராக பொறுப்பேற்ற முதல் நபராக பிலிப்பு இருந்தார். இரு பதவிக்காலங்களில் இவர் ஆட்சி புரிந்த 45 ஆண்டுகள், 21 நாட்கள் தற்கால எசுப்பானிய வரலாற்றில் நீண்ட ஆட்சிக்காலம் ஆகும். தவிரவும் எசுப்பானியாவின் மூன்று அரசர்களுக்கு தந்தையாக இருந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia