என் எச் எம் ரைட்டர்

என் எச் எம் ரைட்டர் சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருள் சிறந்த மென்பொருளுக்கான தமிழக அரசின் விருதை 2010ஆம் ஆண்டில் பெற்றுள்ளது.[1]

தமிழ் மொழியில் தட்டச்சுச் செய்ய

என் எச் எம் ரைட்டரை நிறுவும்போதே தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவிறக்க இணைப்பில் முதலாவதாக உள்ள அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதைத் தவிர ஏனையவற்றில் தமிழையே உள்ளீட்டு மொழியாக கொள்ளும். பதிவிறக்க இணைப்பில் இறுதியாக உள்ளதைத் தவிர ஏனையவை விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே ஆரம்பித்துவிடுவதால் தமிழில் தட்டசுச் செய்வதும் எளிதானாகும். இறுதிப் பதிவிறக்கத்தில் விண்டோஸ் கணினிகளில் நிருவாக அணுக்கம் இல்லாத கணினிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பு: கடைசியாக் கொடுக்கப்பட்ட இணைப்பில், விண்டோஸ் விஸ்டா/7 இயங்குதளங்களில் சரிவர வேலைசெய்யும். இதன் சிறப்பம்சமே, இது விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளில் கிழக்கு ஆசிய மொழிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் சரிவர வேலை செய்யும் தன்மையுடையது.

ஆதரிக்கும் தமிழ் விசைப்பலகைகள்

  1. Alt+0 விசைபலகை இல்லை அல்லது கணினியின் விசைப்பலகை (உங்கள் விண்டோஸ் ஆங்கிலப் பதிப்பாயின் ஆங்கிலம்)
  2. Alt+1 ஒருங்குறி தமிழ் 99
  3. Alt+2 ஒருங்குறி ஒலியியல் (எழுத்துப்பெயர்ப்பு)
  4. Alt+3 ஒருங்குறி பழைய தட்டச்சுப் பலகை
  5. Alt+4 ஒருங்குறி பாமினி விசைப்பலகை
  6. Alt+5 ஒருங்குறி இன்ஸ்கிரிப்ட்


பதிவிறக்கம்

மேற்கோள்கள்

  1. "நியூ ஆரிசன் மீடியா". Archived from the original on 2012-07-30. Retrieved 2012-08-18.

வெளி இணைப்பு

என் எச் எம் ரைட்டர் பயன்படுத்தி நமது கீபோர்டை நாமே உருவாக்க[தொடர்பிழந்த இணைப்பு]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya