ஏக்தா கபூர்ஏக்தா கபூர்(பிறப்பு 7 ஜூன் 1975)[1] என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் 'பாலாஜி டெலிஃபில்ம்ஸ்' நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் படைப்புத் தலைவரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்படத்துறையிலும், தொலைக்காட்சித் துறையிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியில் ஏறத்தாழ 30 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்ஏக்தா கபூர் 1975 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரது தந்தை நடிகர் ஜீதெந்ரா மற்றும் நடிகை தாயார் ஷோபா கபூர் ஆவார். இவர் மஹிமின் பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளியிலும், மிதிபாய் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவரது தம்பி துஷார் கபூரும் பாலிவூட் நடிகர் ஆவார்.[2][3][4] பணிஏக்தா கபூர் 15 வயதில் தனது பணி வாழ்ககையை தொடங்கினார். விளம்பரம், திரைப்படத் தயாரிப்பாளர் கைலாஷ் சுரேந்தரநாத்துடன் பணியாற்றினார். தனது தந்தையிடம் நிதியுதவி பெற்று தயாரிப்பாளர் ஆனார்.[5] 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் திரைப்பட தயாரிப்பில் பாலிவுட் ஈடுபட்டார். சஞ்சய் குப்தா, சுனில் செட்டி ஆகியோருடனும் பணி புரிந்தார். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் பல திரைப்படங்களை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் அவரது திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியடைந்த பின்னர் அவர் தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.[6] ஏக்தா கபூர் 2012 ஆம் ஆண்டில் தனது தயாரிப்பு நிறுவனமான பாலாஜி டெலிஃபில்ம்ஸ் மூலம் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ் என்ற ஊடக பயிற்சி பள்ளியை தொடங்கினார்.[7] இவர் பாலாஜி டெலிஃபில்ம்ஸ் லிமிடட் மூலம130 இற்கும் மேற்பட்ட இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். நாகினி, கும்கும் பாக்யா, கசம் தேரே பியார் கி, குண்டலி பாக்யா போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. இவர் "இந்திய தொலைக்காட்சி ராணி" என்ற பெருமைக்குரியவர்.[5] ஏக்தா கபூர் தனது டிஜிட்டல் பயன்பாடான ஏஎல்டி பாலாஜி மூலம் நிகழ்நேர 40 வலை தொலைக்காட்சி தொடர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.[5] விருதுகளும் மரியாதைகளும்திரைக்கதை எழுதுதல், படைப்பு மாற்றம் மற்றும் கருத்து உருவாக்கம் ஆகியவற்றிலும் பணியாற்றுகிறார். 2001 ஆம் ஆண்டில் ஆசியா வீக் பத்திரிகையின் ஆசியாவின் மிக சக்திவாய்ந்த தகவல்தொடர்பாளர்களில் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தொழில் வாழ்க்கையைத் தொடங்க உதவியுள்ளார்.[9] இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) பொழுதுபோக்கு குழுவுக்கு தலைமை தாங்க தேர்வு செய்யப்பட்டார்.[10] ஏக்தா கபூர் தொலைக்காட்சித் துறையில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[11] ஏக்தா கபூர் பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பாளராக இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள், இந்திய டெல்லி விருதுகள், கலகர் விருதுகள், ஆசிய தொலைக்காட்சி விருதுகள், அப்சரா விருதுகள், ஜீ ரிஷ்டே விருதுகள், ஸ்டார் பரிவார் விருதுகள், 3 வது போரோப்ளஸ் விருதுகள், புதிய திறமை விருதுகள், பெரிய நட்சத்திர பொழுதுபோக்கு விருதுகள், 4 வது போரோப்ளஸ் விருதுகள், ஜிஆர் 8! மகளிர் விருதுகள், ஆசியாவின் சமூக வலுவூட்டல் விருதுகள், லயன்ஸ் தங்க விருதுகள், ஸ்டார்டஸ்ட் விருதுகள், திரை விருதுகள், புனே சர்வதேச திரைப்பட விழா, ஜீ கௌரவ் புராஸ்கர், தேசிய ஊடக வலையமைப்பு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள், உலகளாவிய இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள், தாதாசாகேப் பால்கே அகாடமி விருதுகள் மற்றும் ஈடிசி பாலிவுட் வர்த்தக விருதுகள் ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார்.[9] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia