ஐயோனியா
![]() ஐயோனியா (Ionia) (பண்டைய கிரேக்கம்: Ἰωνία, Ionía or Ἰωνίη, Ioníe) பண்டைய அனதோலியாவின் ஏஜியன் கடற்கரையில் (தற்கால துருக்கி) அமைந்த நகரமாகும். சிர்னா என அழைக்கப்படும் இஸ்மீர் அருகே அமைந்தது ஐயோனியா. இதன் வடக்கில் கிரேக்கர்களின் ஐயோனியா கூட்டமைப்பின் குடியிருப்புகள் கொண்டது. ஐயோனியா பிரதேசம், பாரசீக அகாமனியப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. ஐயோனியாவில் கிரேக்கர்களும், அகாமனியப் பேரரசின் பாரசீகர்களும் அதிகம் வாழ்ந்தனர். கிமு 499 முதல் 486 முடிய ஐயோனியாவில் கிரேக்கர்கள் கிளர்ச்சி செய்த போது, கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் கிரேக்க ஐயோனியர்களை முதலாம் டேரியஸ் ஒடுக்கினார். எல்லைகள்ஐயோனியாவின் வடக்கில் எயோலசும், கிழக்கில் லிடியாவும், தெற்கில் கரியாவும், மேற்கில் ஏஜியன் கடலும் எல்லைகளாகக் கொண்டது. புவியியல்ஐயோனியா, வடக்கிலிருந்து தெற்காக 150 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக 60 முதல் 90 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.[1]
அரசியல்வரலாற்றில் ஐயோனியா பிரதேசம், கிரேக்க, உரோம மற்றும் பாரசீகர்களின் ஆட்சிப் பகுதியாக விளங்கியதால் இங்கு கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்களின் அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தது. மக்கள் தொகையியல்கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசுவின் கூற்றுப்படி, ஐயோனியவின் 12 நகரங்களில் மக்கள் வாழ்ந்ததனர். வடக்கு ஐயோனியாவில் கிரேக்க நாட்டின் பெலிப்பினோ மக்கள் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்.[2] ஐயோனியாவின் நகரங்கள் மிலெட்டஸ், மையூஸ், பிரைனி, எபிசுஸ், கோலோபோன், லெபிடோஸ், தியோஸ், போசியா, சமோஸ் மற்றும் சியோஸ் ஆகும்.[3] இஸ்மீ எனும் ஸ்மிர்னா நகரம் பின்னர் ஐயோனியர்களின் குடியிருப்பாக மாறியது.[4] நவீன துருக்கியில் ஐயோனியா பகுதி மக்களை யுனான்கள் என்று அழைக்கின்றனர். வரலாறு![]() கிமு 16ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை ஐயோனியா பகுதி, கிரேக்க இட்டையிட்டுப் பேரரசின் பேரரசின் பகுதியாக இருந்தது. 11ம் நூற்றாண்டு முதல் கி கிரேக்கர்கள் ஐயோனியாப் பகுதிகளில் குடியேறத் துவங்கினர். லிடியாப் பேரரசில்கிமு 700ல் லிடியாப் பேரரசின் கீழ் ஐயோனியா சென்றது. அகாமனிசியப் பேரரசில்கிமு 550 முதல், முதலாம் சைரஸ் காலத்தில் அகாமனியப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாக ஐயோனியா இருந்தது.[5] முதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் ஐயோனியாவில் கிளர்ச்சியைத் தூண்டிய கிரேக்கர்களை அடக்கினார். ![]() கிரேக்கர் ஆட்சியில்பேரரசர் அலெக்சாண்டர் காலத்தில், ஐயோனியா நகரங்கள் தன்னாட்சியுடன் விளங்கியது. ஹெலனிய காலம்பேரரசர் அலெக்சாண்டருக்குப் பின் ஹெலனிய காலத்தில், ஐயோனியா செலூக்கியப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது. உரோமர் ஆட்சியில்கிபி 330 – 1453 வரை உரோமைப் பேரரசின் பகுதியாக ஐயோனியா விளங்கியது. இலக்கியக் குறிப்புகள்
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
![]() |
Portal di Ensiklopedia Dunia