கதைப்பூஞ்சைத் தொகுதி
கதைப்பூஞ்சைத் தொகுதி (Basidiomycota) (/bəˌsɪdioʊmaɪˈkoʊtə/)[2] அல்லது சுத்தியல் பூஞ்சைத் தொகுதி என்பது பூஞ்சைத் திணையில் "உயர்பூஞ்சை"த் துணைத்திணையில் உள்ள இரு பூஞ்சைத் தொகுதிகளில் ஒன்றாகும். மற்றொன்று பைப்பூஞ்சைத் தொகுதி ஆகும். இதன் உறுப்பினர்கள் கதைப்பூஞ்சைகள் அல்லது பேசிடியோமைசீட்டுகள் எனப்படுகின்றன. கதைப்பூஞ்சைத் தொகுதி மிகக் குறிப்பாக பின்வரும் குழுக்களை உள்ளடக்குகிறது: காளான்கள், பந்துப் பூஞ்சைகள், ஒட்டுகொம்புக் காளான், அடைப்புக்குறி பூஞ்சை,பிற பலபுரையிகள், குழைவுப் பூஞ்சை, வெண்குடையிகள், சாந்திரெல்லெகள், மண் உடுக்கள், தூசுப் பூஞ்சை, ஒட்டுத் தூசுப் பூஞ்சை, துருப்பூஞ்சை, கண்ணாடி நொதிப் பூஞ்சை, மாந்த நோயீனி நொதியாகிய கிரிப்டோகாக்கசு. கதைப்புஞ்சைத் தொகுதி இழையாலான படலப் பூஞ்சைகளாகும் ( நொதிப் பூஞ்சை மட்டும் விதிவிலக்கு). இது சிறப்பு கதைவடிவ (சுத்தியல் வடிவ) முனைக்கலத்தை (இது கதைக்கலம் எனப்படும்) உருவாக்கி இனப்பெருக்கத்தைச் செய்கிறது. இந்த கதைக்கலம் வழக்கமாக நான்கு குன்றல்பிளவு விதைத்தூள்களைப் பெற்றிருக்கும் . இந்தச் சிறப்பு விதைத்தூள்கள் கதை விதைத்தூள்கள் எனப்படுகின்றன.[3] என்றாலும் சில கதைப்பூஞ்சைகள் பாலினமற்ற இனப்பெருக்கத்தை நிகழ்த்துகின்றன. பாலினமற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யும் கதைப்பூஞ்சைகளும் பிற கதைப்பூஞ்சைகளோடு முற்றொருமித்தவைகளாக அமைவதாலும் அவற்றைப் போன்ற உடற்கூற்றியல் தன்மைகலப் பெற்றிருப்பதாலும் ஒரே தொகுதியில் அடங்குகின்றன. இந்த இருவகைகளும் முற்றொருமித்த கலச்சுவர் உறுப்புகளையும் கொக்கியிணைவையும் தொகுதி மரபாய்வுத் தரவுகளையும் பெற்றமைகின்றன. வகைபாடுஓர் அண்மை வகைபாடு (67 பூஞ்சை அறிஞர் குழுவால் உருவாக்கப்பட்டது)[4] இதில் மூன்று உட்தொகுதிகளையும் இரு வகுப்புவகைகளையும் இனங்கண்டுள்ளது. அவையாவன, புச்சினியோ மைக்கோட்டினா (Pucciniomycotina), உசிதிலாகோமைக்கோட்டினா (Ustilaginomycotina), அகாரிக்கோமைக்கோட்டினா (Agaricomycotina) எனும் மூன்று தொகுதிகளும் இவற்றுக்கு வெளியே அமைந்த வால்லெமியோமைசீட்டுகள்(Wallemiomycetes), என்ட்ரோரைசோமைசீட்டுகள்(Entorrhizomycetes) எனும் இருவகுப்புகளும் ஆகும். இப்போதைய வகைபாட்டின்படி, உட்தொகுதி பல முதிய வகையன்களை இணைப்பதோடு வ்ழக்கிழந்த பல வகையன் குழுக்களின் ஊடாகவும் செல்கிறது. கதைப்பூஞ்சைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, மூன்று உட்தொகுதிகளையும் ( ஆறு பிரிக்கப்படாத வகுப்புகள் உட்பட) 16 வகுப்புகளையும் 52 வரிசைகளையும் 177 குடும்பங்களையும் 1,589 பேரினங்களையும் 31,51மினங்களையும் பெற்றுள்ளது.[5] பின்வரும் பழைய மரபு சார்ந்த இரு வகுப்புகள் இப்போது வழக்கொழிந்துவிட்டன:
முன்பு முழுக் கதைப்பூஞ்சைகள் தொகுதியுமே வகுப்பு பெயரால் பேசிடியோமைசீட்டுகள் என வழங்கப்பட்டது. இது 1959 இல் உருவாகிய சரியற்ற வகைபாடாகும். இது பைப்பூஞ்சைகளுக்கு மறுதலையாக உருவாக்கப்பட்டதாகும். அப்போது இந்த இரண்டுமே தொகுதிகளாகக் கருதப்படவில்லை. மேலும்வகப்புப் பெயர்களாகிய பேசிடியோமைசீட்டுகளும் அசுக்கோமைசீட்டுகளும் மிகத் தளர்வாக அசுக்கோமைக்கஓட்டவுக்கும் பேசிடியோமைக்கோட்டாவுக்கும் வழங்கி வந்தன. கொச்சையாக இவை பேசிடியோசு எனவும் அசுக்கோசு எனவும் சுருக்கப்பட்டன.[சான்று தேவை] வகைமை வாழ்க்கைச் சுழற்சி![]() ஆண், பெண் என இருபாலினங்கள் அமைந்த விலங்கு, தாவரங்களைப் போலல்லாமல், துருப்பூஞ்சையைத் தவிர பிற கதைப்பூஞ்சைகள் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியாத, ஆனால், ஒன்றுக்கு ஒன்று பொருந்திய, குறுமவக எண்ணையும் (ஒரு மடி வகை) படலக் காளான் இழை மைசீலியாவையும் கொண்டுள்ளது. இந்த ஒருமடி மைசீலியா கலக்கணிகம் ஊடாக இணைய, பொருந்தியுள்ள கலக்கரு ஒரு மைசீலியாவில் இருந்து மற்றொன்றுக்குள் நகர்ந்து களத்தில் உள்ள கலக்கருவோடு இணைந்து அதன் இணையாகி விடுகிறது. கலக்கரு இணைதல் காலத் தாழ்த்தம் உறுகிறது. எனவே கலக்கரு இணைகள் தொடர்ந்து இரட்டைக்கருவனாக அமைகின்றன.னைந்தக் காளான் இழை இரட்டைக்கருநிலையினதாக கூறப்படுகிறது. மாறாக ஒருமடி மைசீலியா ஒற்றைக்கருவனாகக் கருதப்ப்படுகிறது. மேற்கோள்கள்
தகவல் வாயில்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia