திணை (உயிரியல்)![]() உயிரியலில், இராச்சியம் (Kingdom) அல்லது உயிரித்திணை என்பது, உயிரினங்களுக்கான, அறிவியல் வகைப்பாட்டுப் படிநிலையில் மிக உயர்ந்த அல்லது மிக உயர்ந்த நிலைக்கு அண்மையாக உள்ளவை, வகைப்பாட்டியல் அலகு ஒன்றைக் குறிக்கும். இராச்சியம் மிக உயர்ந்த நிலையாகக் கொள்ளப்படாதவிடத்து, அதற்கும் மேலாக ஆட்களம் (Domain or Empire) என்னும் அலகு பயன்படுத்தப்பட்டது. இராச்சியத்திற்குக் கீழான அலகாக தொகுதிகள் வகைப்படுத்தப்பட்டன. அதற்குக் கீழாகச் செல்லும் படிநிலைகளில் முறையே வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் என்பன வகைப்படுத்தப்பட்டன. இரண்டு இராச்சியங்கள்கரோலஸ் லின்னேயஸ் இற்கு முன்னான காலப் பகுதியில் தாவரங்களும், விலங்குகளும் தனித்தனி இராச்சியங்களாகக் கருதப்பட்டு வந்தது. பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் உயிரினங்களை தாவரம், விலங்கு எனப் பிரித்திருந்தார்.[1] அரிஸ்டாட்டல் மேலும் விலங்குகளை வகைப்படுத்தினார்.[2] அவரது மாணவரான தியாஃப்ரேஸ்டஸ் (Theophrastus) தாவரங்களை வகைப்படுத்தினார்.[3] ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் அவர்களது வகைப்பாட்டியல் போதுமற்றதாக உணரப்பட்டதனால், கைவிடப்பட்டது. 1735 இல் கரோலஸ் லின்னேயஸ் தான் எழுதிய நூலில், உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் என இரண்டு இராச்சியங்களாகப்பிரித்ததுடன், உயிரற்ற கனிமங்களை அவற்றிலிருந்து வேறுபடுத்தினார். இவரே முதன் முதலாக அனைத்துலக தரத்திற்கு வகைப்பாட்டியலை ஏற்படுத்தியதுடன், புதிய உயிரியல் வகைப்பாடு, மற்றும் இருசொற் பெயரீட்டு முறையையும் அறிமுகப்படுத்தினார்.
மூன்று இராச்சியங்கள்1674 இல் நுண்ணோக்கியியலின் தந்தை என அழைக்கப்படும் ஆன்டன் வான் லீவன்ஹூக் என்பவர் நுண்ணோக்கியால் அவதானிக்கப்படக் கூடிய நுண்ணுயிர்களைப்பற்றி வெளிப்படுத்தினார். அவரால் அவதானிக்கப்பட்ட ஒரு கல உயிரினங்கள் (ஒற்றைக்கல உயிரினங்கள்) விலங்கு இராச்சியத்துள்ளும், தாவர இராச்சியத்துள்ளும் வகைப்படுத்தப்பட்டன. அசையக்கூடியன, விலங்குகளின் கீழ் அடங்குபவைபுரோட்டோசோவா (Protozoa) தொகுதியிலும், நிற பாசிகள் அல்லது அல்காக்களும், பாக்டீரியாக்களும் தாவரங்களின் கீழ் வரும் தலோபைட்டா அல்லது புரோட்டாபைட்டா பிரிவுகளுள்ளும் வகைப்பாடு செய்யப்பட்டன. பல உயிரினங்கள் இரண்டு வகை இராச்சியத்துள்ளும் அடக்கப்பட்டன. அறிவியல் முன்னேற்றமடைந்து செல்லச் செல்ல, மிக அதிகளவிலான உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டதுடன், வகைப்பாட்டியலும் பொருத்தமற்றதாகத் தோன்றியது".[4]. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 1866 இல் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் என்பவர் அதிநுண்ணுயிரி ( Protista) என்னும் மூன்றாவது இராச்சியமொன்றை ஒருவாக்கும் கருத்தை முன்வைத்தார்[4].
1990 இல் ஏற்படுத்தப்பட்ட வகைப்பாட்டின்படி, மூன்று ஆட்களங்கள் (Domains) மிக உயர்ந்த வகைப்பாட்டியல் அலகாகவும், அதற்கு அடுத்ததாக உள்ள அலகாக ஆறு இராச்சியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது மூன்று-ஆட்கள ஒழுங்கமைப்பு எனப்படும்[5][6][1]. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வகைப்பாட்டியல் முறையானது, ஐந்து அல்லது ஆறு இராச்சியங்களை உள்ளடக்கியுள்ளது. நான்கு இராச்சியங்கள்![]() இரண்டு ஆட்களங்கள்பாக்டீரியா, மற்ற உயிரினங்களிலிருந்தும் வேறுபட்ட வகையில், கரு இல்லாத அமைப்பைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டன் (Édouard Chatton) என்பவர் 1925 ஆம் ஆண்டளவில், மெய்யான கருவைக் கொண்ட அமைப்புடையவை மெய்க்கருவுயிரி (Eukaryota) என்றும், கருமென்சவ்வால் சூழப்பட்ட வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்டிராதவை நிலைக்கருவிலி (Prokaryota) என்றும் கூறினார். மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை வகைப்பாட்டியலில் சேர்ப்பதற்கு முன்மொழிந்தார். இதனால் இராச்சியத்திற்கு மேலான ஒரு வகைப்பாட்டியல் அலகொன்றின் தேவை ஏற்பட்டது. அந்த அலகே, மேல் இராச்சியம், அல்லது Empire அல்லது ஆட்களம் எனப் பெயரிடப்பட்டது[7]. சட்டனுடைய முன்மொழிவு உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை.
நான்கு இராச்சியங்கள்1938 இல் ஹேபர்ட் கோப்லண்ட் (Herbert Copeland) என்பவர் இன்னொரு முறையை முன்வைத்தார். இதன்படி தெளிவான கருவற்ற உயிரினங்களான மெய்க்கருவிலிகளை மொனேரா (Monera) என்னும் தனியான இராச்சியத்தினுள் அடக்கினார். இதுவே பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது. கோப்லண்டின் நான்கு இராச்சியப் பகுப்பு, தெளிவான கருவுள்ள ஒற்றைகல மெய்க்கருவுயிரி உயிரினங்களை அதிநுண்ணுயிரி (Protista) என்னும் இராச்சியத்திலேயும், ஏனைய மெய்க்கருவுயிரிகளான விலங்குகளையும், தாவரங்களையும் தனித்தனி இராச்சியங்களாகவும் கொண்டிருந்தது.
காலப்போக்கில் மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி வேறுபாட்டின் முக்கியத்துவம் புலப்படத் தொடங்கியது. 1960 ஆண்டளவில், ஸ்டேனியர் (Stanier), வான் நீல் (van Niel ) என்பவர்கள் சட்டனுடைய இரண்டு ஆட்களங்களையும் பிரபலப்படுத்தி, அவ்விரு ஆட்களங்களுக்குக் கீழே மேற்குறிப்பிட்ட நான்கு இராச்சியங்களையும் வகைப்படுத்தினர்[7].
ஐந்து இராச்சியங்கள்பூஞ்சைகளுக்கும், ஏனைய தாவரங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு பலகாலமாகவே உணரப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்கூட தனது இறுதியான வகைப்படுத்தலுக்கு முன்னராக, ஆரம்பத்தில், பூஞ்சைகளை தாவர இராச்சியத்தில் சேர்க்காமல், அதிநுண்ணுயிரிகள் இராச்சியத்தில் சேர்த்திருந்தார். பின்னரே, அதனைத் திருத்தியிருந்தார்[4]. 1969 இல், ராபர்ட் விட்டேக்கர் (Robert Whittaker) பூஞ்சை அல்லது பங்கசு (Fungi) அடங்கிய தனி இராச்சியமொன்றை உருவாக்கி ஐந்து இராச்சியங்கள் கொண்ட முறையைக் கொண்டு வந்தார். ஒரு நியமமாகப் பிரபலமடைந்த இம்முறை சில திருத்தங்களுடன் இன்றும் பயன்படுவதுடன், புதிய பல்-இராச்சிய முறைமைகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது. இந்த ஐந்து இராச்சிய முறை முக்கியமாக உயிரினங்கள் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறும் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டது. தாவரங்கள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக கனிம மூலக்கூறுகளைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்பவையாகவும் (Autotroph) இருக்கும். விலங்குகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், தாமாகவே உணவைத் தயாரிக்க முடியாமல், வேறு கரிமப் பொருட்களையோ, அல்லது வேறு உயிரினங்களையோ உண்பதன் மூலம் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Heterotroph) இருக்கும். பூஞ்சைகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், இறந்த அல்லது அழுகும் கரிமப் பொருட்களிலிருந்து தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Saprotroph) இருக்கும்[8]. ஏனைய இரண்டு இராச்சியங்களும் அதிநுண்ணுயிரிகளும், மொனராவுமாகும். இந்த ஐந்து இராச்சிய முறையானது, இரண்டு ஆட்கள முறையுடன் இணந்திருக்கலாம்.
ஆறு இராச்சியங்கள்மூன்று ஆட்சிப்பிரிவுகள்சுருக்கம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia