கயிறு இழுத்தல்![]() கயிறு இழுத்தல் என்பது இழுபறி போர் என்றும் அழைக்கப்படுகிறது. இரு குழுக்கள் ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். யார் எதிர்க் குழுவை தமது பக்கத்துக்கு இழுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவர். இந்த விளையாட்டு தமிழர்களாலும் பரவலாக விளையாடப்படுகிறது சொல்ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் "டக் ஆஃப் வார்" என்ற சொற்றொடருக்கு "தீர்க்கமான போட்டி; உண்மையான போராட்டம் அல்லது சண்டை; மேலாதிக்கத்திற்கான கடுமையான போட்டி" என்று பொருள் தருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் மட்டுமே இது ஒரு கயிற்றின் எதிர் எதி முனைகளை இழுத்துச் செல்லும் இரு அணிகளுக்கு இடையிலான தடகள போட்டிக்கான ஒரு வார்த்தையாக பயன்படுத்தப்பட்டது.[1] தோற்றம்கயிறு இழுத்தலின் தோற்றம் நிச்சயமற்றது, ஆனால் இந்த விளையாட்டு கம்போடியா, பண்டைய எகிப்து, கிரீசு, இந்தியா மற்றும் சீனாவில் நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு தாங் வம்ச புத்தகத்தின் படி, தி நோட்ஸ் ஆஃப் ஃபெங், "ஹூக் புல்லிங்" (牽 鉤) என்ற பெயரில், வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் (கி.மு 8 முதல் 5 ஆம் நூற்றாண்டுகள் வரை) சூ மாநிலத்தின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இராணுவத் தளபதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. . தாங் வம்சத்தின் போது, தாங்கின் பேரரசர் சுவான்சோங் 167 மீட்டர்கள் (548 அடி) வரை குறுகிய கயிறுகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளைப் பயன்படுத்தி பெரிய அளவிலான இழுபறி விளையாட்டுகளை விளையாட ஊக்குவித்துள்ளார். மேலும் கயிற்றின் ஒவ்வொரு முனையிலும் 500 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு பக்கமும் அவர்களின் மேளம் அடிப்பவர்களைக் கொண்டிருந்தது.[2] பண்டைய கிரேக்கத்தில் இந்த விளையாட்டு ஹெல்குஸ்டிண்டா என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் "நான் இழுக்கிறேன்" என்பதாகும்,[3] ஒரு கயிற்றின் பிடியைக் காட்டிலும் கைககளை கயிற்றின் மீது தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினம் மேலும் இது அதிக சிரமத்தை அளிக்கும். பண்டைய கிரேக்கத்தில் இந்த வகை விளையாட்டுக்கள் வலிமைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும், மேலும் முழு கவசத்தில் போருக்குத் தேவையான வலிமையை உருவாக்க இது உதவும்.[4] 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கயிறு இழுத்தல் பிரபலமாக இருந்தது என்று தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. எசுக்காண்டினாவியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த கயிறு இழுத்தல் போட்டி வெற்றியாளார்களைப் பற்றிய கதைகள் மேற்கு ஐரோப்பாவில் பரவலாக இருக்கின்றன, அங்கு வைகிங் வீரர்கள் வலி மற்றும் சகிப்புத்தன்மையின் சோதனைகளில், போர் மற்றும் கொள்ளைக்கான தயாரிப்புகளில் திறந்த நெருப்பு குழிகளின் மீது விலங்குகளின் தோல்களை இழுக்கின்றனர்.[எப்போது?] பொ.ச ஆ.1500 மற்றும் 1600 களில் பிரெஞ்சு சேட்டாக்சு தோட்டங்கள் மற்றும் பின்னர் பெரிய பிரித்தானியாவின் போட்டிகளின் போது கயிறு இழுத்தல் பிரபலப்படுத்தப்பட்டது பொ.ச ஆ.1800 களில் கயிறு இழுத்தல் என்பது கடற்படையினரிடையே ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியது.[5] மொகாவே மக்கள் எப்போதாவது சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான கயிறு இழுத்தல் போட்டிகளைப் பயன்படுத்தினர்.[எப்போது?][6] ஒரு விளையாட்டாகபல நாடுகளில் கயிறு இழுத்தல் அணிகள் உள்ளன, மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பங்கேற்கிறார்கள். இந்த விளையாட்டு 1900 முதல் 1920 வரை ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டது. இந்த விளையாட்டு உலக விளையாட்டுகளின் ஒரு பகுதியாகும். டக் ஆஃப் வார் இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் (TWIF), தேசிய அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப்பை இரு வருடங்களாக, உட்புற மற்றும் வெளிப்புற போட்டிகளுக்காக ஏற்பாடு செய்கிறது, மேலும் அணிகளுக்குள் இதேபோன்ற போட்டியை நடத்துகிறது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia